ARTICLE AD BOX
மொத்த இந்தியாவும் வாங்க போகும் VIVO போன்.. 16GB ரேம், 90W சார்ஜிங், 6500mAh பேட்டரி, IP65 ரேட்டிங்!
விவோ (Vivo) நிறுவனம் அதன் பிரபலமான வி சீரீஸின் கீழ் ஒரு புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. அது விவோ வி50 லைட் 4ஜி (Vivo V50 Lite 4G)ஸ்மார்ட்போனாகும். இந்த ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் என்ன? இது என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது? இந்த ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள் என்னென்ன? இதோ விவரங்கள்:
விவோ வி50 லைட்4ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு உடனான 6500mAh பேட்டரி
- 8ஜிபி ரேம் உடனான குவால்காம் ஸ்னாப்டிராகன் 685 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஃபன்டச்ஓஎஸ் 15 ஸ்கின்
- 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா யூனிட்

விவோ வி50 லைட்4ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை விவோ வி50 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 1080 x 2392 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1800 நிதிஸ் பீக் ப்ரைட்னஸ், 94.2 சதவீதம் ஸ்க்ரீன் டூ பாடி மற்றும் எஸ்ஜிஸ் ஐ கம்ஃபோர்ட் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டுள்ள 6.77-இன்ச் FHD+ 2.5டி pOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை இது 8GB LPDDR4X ரேம் மற்றும் 256GB UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 685 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் விரிவாக்கத்தையும் (மொத்தம் 16ஜிபி ரேம்) ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஃபன்டச்ஓஎஸ் 15 ஸ்கின் உடன் வருகிறது.
கேமராக்களை பொறுத்தவரை விவோ வி50 லைட் 4ஜி ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் IMX882 ப்ரைமரி சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சாரை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக இதில் 32-மெகாபிக்சல் சென்சார் உள்ளது
பேட்டரியை பொறுத்தவரை விவோ வி50 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் 6,500mAh பேட்டரியை கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷனைகளை பொறுத்தவரை இது டூயல் பேண்ட் வைஃபை, 4ஜி, என்எப்சி, ஜிபிஎஸ், ஓடிஜி, ப்ளூடூத் 5.0 மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது து
கவனிக்கப்பட வேண்டிய அம்சங்களை பொறுத்தவரை இது டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இராணுவ-தர MIL-STD-810H டிராப் ரெசிஸ்டன்ஸ் சான்றிதழ் மற்றும் ஐபி65 தூசி மற்றும் ஸ்பிளாஸ் ரெசிஸ்டன்ஸ் பில்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது. கடைசியாக இது அளவீட்டில் 163.77x76.28x7.79 மிமீ மற்றும் எடையில் 196 கிராம் உள்ளது.
விவோ வி50 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை: துருக்கியில் விவோ வி50 லைட் 4ஜி ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.45,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இது Titanium Black மற்றும் Titanium Gold ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது.
விவோ வி50 லைட் 4ஜி எப்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்கிற விவரங்களை விவோ இன்னும் உறுதிப்படுத்தவில்லை. நினைவூட்டும் வண்ணம் கடந்த 2025 பிப்ரவரியில் தான் விவோ வி50 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இடையே விவோ டி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனும் அறிமுகமானது.
விவோ டி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை: பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.13,999 க்கும், 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.14,999 க்கும் மற்றும் ஹை-எண்ட் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.16,999 க்கும் வாங்க கிடைக்கிறது. இது மெரைன் ப்ளூ (Marine Blue) மற்றும் ப்ரோடான் பர்பிள் (Proton Purple) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது
விவோ டி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- பிளாஸ்டிக் பாடி
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங்
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்
- லைவ் டெக்ஸ்ட், சர்க்கிள் டு சர்ச் மற்றும் ஏஐ ஸ்கிரீன் டிரான்ஸ்லேஷன் போன்ற ஸ்மார்ட் அம்சங்கள்
- டூயல் கேமரா செட்டப்
- 50எம்பி ப்ரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார்
- 8எம்பி செல்பீ கேமரா
- ஏஐ ஏரேசர் உட்பட பல ஏஐ கேமரா அம்சங்கள்
- 30 fps இல் 4K வீடியோ ரெக்கார்டிங்
- பெரிய 6,500mAh பேட்டரி
- 44W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு.