ARTICLE AD BOX
இதுதான் ஆஃபர்.. சோனி கேமரா.. 100W சார்ஜிங்.. OnePlus 5ஜி போனை வாங்க சரியான நேரம்.. எந்த மாடல்?
இந்தியாவில் ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் போன்கள் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவருகிறது. எனவே தான் இந்தியாவில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் போன்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஒரு அசத்தலான ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
அதாவது அமேசான் (amazon) தளத்தில் ஒன்பிளஸ் நோட் 4 5ஜி (OnePlus Nord 4 5G) போனுக்கு தான் 12 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.28,998 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்டு வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த போனை வாங்கினால் ரூ.4000 வரை தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஒன்பிளஸ் போனை ரூ.24998 விலையில் வாங்கிவிட முடியும்.

ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி அம்சங்கள் (OnePlus Nord 4 5G Specifications): 6.74 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2772 × 1240 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2150 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 450 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, எச்டிஆர்10பிளஸ் (HDR10+) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன.
இதுதவிர அக்வா டச் (Aqua Touch), அல்ட்ரா எச்டிஆர் (Ultra HDR), ப்ரோஎக்ஸ்டிஆர் (ProXDR), ஸ்கிரீன் கெஸ்ச்சர்ஸ் (Screen Gestures) போன்ற டிஸ்பிளே அம்சங்களும் இந்த ஒன்பிளஸ் போனில் உள்ளன. டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers), டைப்-சி சார்ஜிங் போர்ட் ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.
ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 (Octa Core 4nm Snapdragon 7+ Gen 3) சிப்செட்உடன் ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி போன் வெளிவந்துள்ளது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஆக்ஸிஜன்ஓஎஸ் 14.1 (OxygenOS 14.1)மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் இந்த போனுக்கு கிடைக்கும்.
50 எம்பி வைடு மெயின் கேமரா (Sony LYT 600) + 8 எம்பி அல்ட்ரா வைடு என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பு இந்த போனில் உள்ளது. மேலும் 20X டிஜிட்டல் ஜூமிங், 4K வீடியோ ரெக்கார்டிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளன இந்த போனின் ரியர் கேமராக்கள். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி சோனி ஐஎம்எக்ஸ்355 சென்சார் உள்ளது.
ஏஐ பெஸ்ட் பேஸ் (AI Best Face), ஏஐ கிளியர் பேஸ் (AI Clear Face), ஏஐ எரைசர் (AI Eraser) மற்றும் ஏஐ கட்அவுட் (AI Smart Cutout) போன்ற கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன. அதேபோல ஏஐ ஆடியோ சம்மரி (AI Audio Summary) பீச்சரும் இந்த போனில் வருகிறது.
5500mAh பேட்டரி மற்றும் 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி போன் வெளிவந்துள்ளது. இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும், அதேசமயம் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்.