ARTICLE AD BOX
அடிச்சான் பாரு காப்பி.. iPhone லுக்கில் வெளிவரும் Honor 5ஜி போன்.. 108எம்பி கேமரா.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் விரைவில் ஹானர் 400 லைட் (Honor 400 Lite) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் படங்கங்கள் வெளியாகி உள்ளது. எனவே வரும் வாரங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதேபோல் இந்த ஹானர் 400 லைட் போன் ஐபோன் (iPhone) போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
அதாவது இந்த ஹானர் 400 லைட் போனின் பின்புற கேமராக்கள் ஐபோனின் கேமரா போலவே உள்ளது. அதேபோல் பிளாக், சில்வர் மற்றும் டர்க்கைஸ் (Turquoise) நிறங்களில் இந்த போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த ஹானர் 400 லைட் ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஹானர் 400 லைட் அம்சங்கள் (Honor 400 Lite Specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7025 சிப்செட் (MediaTek Dimensity 7025 chipset) உடன் இந்த ஹானர் 400 லைட் போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
குறிப்பாக ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் ஹானர் 400 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியைக் கொண்டுள்ளது இந்த ஹானர் 400 லைட் போன்.
6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியுடன் ஹானர் 400 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பிரைட்னஸ் வசதி உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
108எம்பி ரியர் கேமரா உடன் ஹானர் 400 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். ஆனால் இந்த போனின் செல்பி கேமரா விவரங்களை வெளியிடவில்லை அந்நிறுவனம். மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும்.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் ஹானர் 400 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 5000mAh பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் ஹானர் 400 லைட் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஹானர் ஸ்மார்ட்போனில் உள்ளன. பின்பு ஹானர் 400 லைட் போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.