ARTICLE AD BOX
மார்கெட் மிரளுது.. 24GB ரேம்.. 6400mAh பேட்டரி.. SONY கேமரா.. 80W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டே மிரளும்படி 24 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், சோனி சென்சார் கொண்ட மெயின் கேமரா, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், ஃபைபாஸ் சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங் கொண்ட 6400mAh பேட்டரி, 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 1.5K ரெசொலூஷன் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, 4D கேம் வைப்ரேஷன் போன்ற பீச்சர்களுடன் களமிறங்கிய ஐக்யூ நியோ 10ஆர் (iQOO Neo 10R) போனின் விற்பனை அறிமுக சலுகையுடன் தொடங்கி இருக்கிறது.
ஐக்யூ நியோ 10ஆர் அம்சங்கள் (iQOO Neo 10R Specifications): ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) கிடைக்கிறது. 3 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருடங்கள் செக்யூரிட்டி அப்டேட்கள் வருகிறது. ஆப்பிள், சாம்சங் மாடல்களை போலவே ஏஐ பீச்சர்களை இந்த ஃபன்டச் ஓஎஸ் 15 கொடுக்கிறது.

லைவ் கட்அவுட் கிளிப் (Live Cutout Clip), சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle to Search), ஏஐ போட்டோ என்ஹான்ஸ் (AI Photo Enhance), ஏஐ எரைஸ் (AI Erase) மற்றும் ஏஐ நோட் அசிஸ்ட் (AI Note Assist) கிடைக்கிறது. அதேபோல கேமிங் பிரியர்களுக்கான ஏஐ வாய்ஸ் சேஞ்சர் (AI Game Voice Changer), அல்ட்ரா கேம் மோட் (Ultra Game Mode) பீச்சர்களை கொடுக்கிறது.
இதுபோக கேமிங் பிரியர்கள் விரும்பும்படி இன்-பில்ட் எப்பிஎஸ் மீட்டர் (In-built FPS Meter), 4D கேம் வைப்ரேஷன் (4D Game Vibration) மற்றும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speaker) கிடைக்கிறது. இயர்போன்களுக்கு ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) அவுட்புட் கிடைக்கிறது. இந்த ஆடியோவுக்கு மேல் டிஸ்பிளே பீச்சர்கள் கிடைக்கின்றன.
ஏனென்றால், 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 2000Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கொண்ட 6.78 இன்ச் (2800 × 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த பிரீமியமான பிளாட் டிசைன் டிஸ்பிளேவில் 4500 பீக் பிரைட்னஸ், 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 480Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது.

எலைட் பர்ஃபாமென்ஸ் மற்றும் கேமிங் ஸ்டெபிலிட்டி கொடுக்கும்படி ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 3 4nm) ப்ராசஸர் கிடைக்கிறது. இதுபோக அட்ரினோ 735 ஜிபியு (Adreno 735 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைப்பதால், லாக்-ப்ரீ கேமிங் அவுட்புட் எதிர்பார்க்கலாம். 12 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி விர்ச்சுவல் ரேம் உள்ளது.
இந்த ஐக்யூ நியோ 10ஆர் போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. 12 ஜிபி ரேம் (12 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட் ஆர்டருக்கு வருகிறது. இந்த வேரியண்ட்களில் மைக்ரோஎஸ்டிகார்டு பயன்படுத்த முடியாது.
ஆகவே, டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) மட்டுமே பேக் செய்துள்ளது. இந்த சிப்செட் மற்றும் டிஸ்பிளேவுக்கு ஏற்ப பேக்கப் கொடுக்கும்படி பிரீமியமான பேட்டரி சிஸ்டம் கிடைக்கிறது. ஹீட் கன்ட்ரோல்களுக்காக 6043எம்எம் வேப்பர் சேம்பர் (Vapor Chamber) கிடைக்கிறது. ஆகவே, பேட்டரியை சுற்றி முந்தைய மாடல்களைவிட பெரிய கூலிங் சிஸ்டம் வருகிறது.
இதுபோக நேரடியாக மதர் போர்டுக்கு சார்ஜிங் போகும்படி ஃபைபாஸ் சார்ஜிங் (Bybass Charging) சப்போர்ட் கிடைக்கிறது. இதனால், பேட்டரிக்கு கூடுதல் டியூரபிலிட்டி மற்றும் ஹீட் கன்ட்ரோல் கிடைக்கும். மேலும், வெறும் 26 நிமிடங்களில் 0-50 சதவீத சார்ஜ் செய்து கொள்ளும்படி 80W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கிடைக்கிறது.
இந்த வேகம் குறைவாக உங்களுக்கு தோன்றலாம். அது உண்மைதான், ஆனால் இந்த ஐக்யூ நியோ 10ஆர் போனில் 6400mAh பேட்டரி வருகிறது. இது முந்தைய மாடல்களைவிட அதிக கேபாசிட்டி கொண்ட பேட்டரி சிஸ்டமாகும். ஆகவே, இவ்வளவு பெரிய பேட்டரிக்கே 26 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜிங் கிடைப்பது வரவேற்க கூடிய ஒன்றாகும்.
இதுபோக 7.5W ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் 55W பிடி சார்ஜிங் (PD Charging) சப்போர்ட் கிடைக்கிறது. இவ்வளவு பெரிய பேட்டரி மற்றும் கூலிங் சிஸ்டம் கிடைப்பதால், போனின் தடிமன் மற்றும் வெயிட் அதிகமாக இருக்குமே என்று நினைக்கலாம். ஆனால், இந்த ஐக்யூ நியோ 10ஆர் போன் வெறும் 7.98 எம்எம் தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் லுக் கொடுக்கிறது.
அதேபோல வெறும் 196 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது. இந்த பாடியுடன் டூயல்-டோன் டிசைன் (Dual Tone Design) கொண்ட ராகிங் ப்ளூ (Raging Blue) மற்றும் 3டி மூன் டெக்ஸ்ச்சர் டிசைன் (3D Moon Texture Design) கொண்ட மூன்நைட் டைட்டானியம் (MoonKnight Titanium) கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. அல்ட்ரா நேரோவ் பெசல் வருகிறது.
ஆகவே, பிளாட் டிஸ்பிளேவில் கேமிங் வியூ பட்டையை கிளப்பும்படி இருக்கிறது. இந்த ஐக்யூ நியோ 10ஆர் போனில் 50 எம்பி மெயின் கேமரா (சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் + ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா (ஜிசி08ஏ3 டபுள்யூஏ1எக்ஸ்ஏ சென்சார்) உள்ளது. 32 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது.
இந்த போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), டைப்-சி ஆடியோ (Type-C Audio), IP65 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த ஐக்யூ நியோ 10ஆர் போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.26,999ஆக இருக்கிறது.
மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.28,999ஆகவும் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.30,999ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போது, அமேசான் (Amazon) மற்றும் ஐக்யூ (iQOO) தளங்களில் ரூ.2000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.24,999 ஆரம்ப விலைக்கு கிடைக்கிறது.