ARTICLE AD BOX
மார்ச் 31 வரை.. 50 நாட்களுக்கு முற்றிலும் இலவசம்.. அம்பானியின் அடுத்த சிக்ஸர்.. Jio-வின் 2வது ஆபர்!
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Jio) நிறுவனமானது, 90 நாட்களுக்கான இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தா சலுகையை அறிவித்த கையோடு, இன்னொரு இலவச சலுகையையும் அறிவித்துள்ளது. இது 50 நாட்களுக்கு கிடைக்கும் இலவச சலுகையாகும். அது என்ன சலுகை? இதோ விவரங்கள்
ஜியோ அறிவித்துள்ள இரண்டாவது சலுகை - 50 நாள் இலவச ஜியோஃபைபர் அல்லது ஜியோஏர்ஃபைபர் சோதனை சலுகை (50-Day free JioFiber or JioAirFiber Trial Offer) ஆகும். இந்த சலுகையின் கீழ் ஜியோ பயனர்களுக்கு ஜியோஃபைபர் அல்லது ஜியோ ஏர்ஃபைபர் மூலம் பிராட்பேண்ட் சேவை ஆனது சோதனை அடிப்படையில் இலவசமாக அணுக கிடைக்கும்.

இந்த இலவச கனெக்ஷனின் கீழ் ஹை ஸ்பீட் இண்டர்நெட் கிடைக்கும், கூடவே 800 க்கும் மேற்பட்ட டிவி சேனல்களுக்கான அணுகல் கிடைக்கும் மற்றும் 11 க்கும் மேற்பட்ட ஓடிடி ஆப்கள் மற்றும் அன்லிமிடெட் வைஃபை ஆகிய நன்மைகள் கிடைக்கும். ஆர்வமுள்ள பயனர்கள் 2025 மார்ச் 31 ஆம் தேதி வரை கிடைக்கும் இலவச ஜியோஃபைபர் அல்லது ஜியோ ஏர்ஃபைபர் சேவையை பயன்படுத்தி பார்க்கலாம்.
90 நாட்களுக்கான இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தா சலுகையை பொறுத்தவரை, ஜியோ வாடிக்கையாளர்களை மகிழ்விக்கவும், கிரிக்கெட் பிரியர்கள் ஐபிஎல் 2025 போட்டிகளை இலவசமாக பார்க்கவும், ஜியோ நிறுவனம் இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை (Free JioHotstar subscription) வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த புதிய சலுகையின் கீழ் ஜியோ பயனர்கள், ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் உள்ள கன்டென்ட்களை 90 நாட்களுக்கு இலவசமாக பார்க்க முடியும், மேலும் ஐபிஎல் 2025 கிரிக்கெட் போட்டிகளை 4கே தரத்தில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய முடியும். ஜியோ பயனர்கள் இந்த சலுகையை (இன்று முதல்) மார்ச் 17, 2025 முதல் பெற முடியும். மேலும் இந்த சலுகை மார்ச் 31, 2025 வரை நீடிக்கும்
ஏற்கனவே ஆக்டிவ் பிளானை கொண்டுள்ள ப்ரீபெய்ட் பயனர்கள் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவிற்கான ரூ.100 ஆட்-ஆன் பேக்கை ரீசார்ஜ் செய்வதன் மூலம் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி-க்கான அணுகலை பெறலாம் என்றும் ஜியோ தெரிவித்துள்ளது. நினைவூட்டும் வண்ணம் ஜியோவின் ரூ.100 ப்ரீபெய்ட் திட்டம் மிகவும் சமீபத்தில் தான் அறிமுகமானது
ரூ.100 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஜியோ ரீசார்ஜ் ஆனது ஒரு டேட்டா-ஒன்லி பிளான் ஆகும். இது மொத்தம் 5ஜிபி அளவிலான டேட்டாவை மட்டுமே வழங்கும். ஆனால் 3 மாதங்களுக்கான அல்லது 90 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை இலவசமாக வழங்கும்.
சுவாரசியமான விஷயம் என்னவென்றால்.. இது ரூ.149 க்கு கிடைக்கும் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை போல் மொபைல்-ஒன்லி சந்தா கிடையாது. அதாவது ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி கன்டென்ட்களை மொபைல் வழியாக மட்டுமே பார்க்க முடியும் என்கிற கட்டுப்பாடு ரூ.100 திட்டத்தில் இல்லை.
மாறாக இது ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் ஆகிய இரண்டிலும் 1080பி வரையிலான ரெசல்யூஷனின் கீழ் ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கும். இதேபோன்ற நன்மைகளை தான் - ஜியோ ஹாட்ஸ்டார் சூப்பர் திட்டமும் வழங்குகிறது. ஆனால் அந்த சந்தாவின் விலை ரூ.299 ஆகும். ஆக எப்படி பார்த்தாலும் ரூ.100 டேட்டா பிளானின் கீழ் கிடைக்கும் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவானது முற்றிலும் லாபகரமான தேர்வாக இருக்கும்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க - ஜியோவின் மற்ற டேட்டா ஒன்லி பிளான்களை போலவே ரூ.100 திட்டத்தின் கீழும் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் கிடைக்காது மற்றும் இதற்கென பிரத்தியேகமான சர்வீஸ் வேலிடிட்டி எதுவும் இருக்காது. மேலும் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய உங்களிடம் ஏற்கனவே ஆக்டிவ் ஆக இருக்கும் ஒரு மெயின் ரீசார்ஜ் தேவை என்பதை கவனத்தில் கொள்ளவும்.