ARTICLE AD BOX
ரவா மசாலா தோசை என்பது சுலபமாகவும், சட்டெனவும் செய்யக்கூடிய ஒரு அருமையான காலை உணவாகும். இதன் வெளிப்புறம் பொன்னிறமாகவும், உள்ளே மசாலா நிறைந்தும் இருக்கும். இந்த தோசைக்கு சைட் டிஷ் கூட தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம். இந்த 6 முறைகளை பின்பற்றி பாருங்கள். வீட்டிலேயே, அதுவும் சட்டென ரவா மசாலா தோசை செய்து, "சமையல் ராணி" பட்டத்தை தட்டி சென்று விடலாம்.
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
மைதா - 1/2 கப்
தண்ணீர் - தேவையான அளவு
தயிர் -1/2 கப்
உப்பு - தேவையான அளவு
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
இஞ்சி - சிறிதளவு (நறுக்கியது)
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - தோசைக்கு தேவையான அளவு
தினமும் 2 கிராம்பு இப்படி சாப்பிடுங்க...நடக்கும் மாற்றத்தை பார்த்து அசந்துடுவீங்க
மசாலா தயாரிக்க:
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
மல்லித்தழை - சிறிதளவு (அலங்காரத்திற்கு)
செய்முறை:
- தோசை மாவு தயார் செய்வதற்கு ரவை, அரிசி மாவு, மைதா, தயிர், உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவை தயார் செய்யவும். இது இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும். 15 நிமிடம் ஊற விடவும்.
- மசாலா தயார் செய்வதற்கு ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். பின்னர் மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- தோசைக்கல்லை சூடாக்கி, சிறிதளவு எண்ணெய் தடவி, மாவை சற்று தண்ணீராக கரைத்து, வழக்கமான தோசை போல் இல்லாமல், பரவலாக இருக்கும் படி ஊற்ற வேண்டும்.
- குறைந்த தீயில் தோசை பொன்னிறமாக வரும் வரை வேக வைக்கவும். மெல்லிதாகவும், விரிப்பாகவும் தோசை இருக்க வேண்டும்.
- தோசை வெந்ததும், மசாலாவை நடுவில் வைத்து மடக்கி விடவும்.
- கிரிஸ்பியான ரவை மசாலா தோசையை தேங்காய் சட்னி, சாம்பாருடன் சூடாக பரிமாறுங்கள்!
அட...கிச்சன் சிங்க் அடைப்பை நீக்க இப்படி ஈஸி வழி இருக்கா? இத்தனை நாள் இது தெரியாம பேச்சே!!
சிறப்பு குறிப்புகள்:
- தோசை மேலும் மொறுமொறுப்பாக வேண்டும் என்றால் மாவில் சிறிது அரிசி மாவு சேர்க்கலாம்.
- மசாலாவுக்கு சுவை அதிகரிக்க சிறிது கறிவேப்பிலை பவுடர் சேர்க்கலாம்.
- தோசையை ஊற்றியதும், ஓரங்களில் எண்ணெய் அல்லது நெய் விட்டு க்ரிஸ்பியான தோசை பெறலாம்.
இந்த 6 எளிய படிகளைப் பின்பற்றி வீட்டிலேயே ருசியான, மொறுமொறுப்பான ரவா மசாலா தோசையை செய்து அசத்துங்கள். மசாலா சேர்த்திருப்பதால் சைட் டிஷ் தேவையில்லை. சீக்கிரமாகவும் பசிக்காது. வயிறு நிறைவாக இருக்கும்.