ARTICLE AD BOX
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கே. நெடுவயல் கிராமத்தில் வசித்து வருபவர் ரவி. இவரின் மகன் லோகேஷ் (வயது 17). இவர் தனது சகோதரர், சகோதரியுடன் இருக்கிறார். இவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாவனம்பட்டி, பெரியார் நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். சாமியானா பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த புதன்கிழமை இரவு சுமார் 12 மணியளவில், லோகேஷ் இருசக்கர வாகனத்தில் நண்பரின் பிறந்தநாள் விழாவுக்கு செல்ல சகோதரரிடம் இருசக்கர வாகனம் கேட்டார். அவர் அதனை கொடுக்க மறுத்ததால், குடும்பத்தார் உறங்கியபின், யாருக்கும் தெரியாமல் லோகேஷ் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றார்.
இதையும் படிங்க: TNPL கிரிக்கெட்டர் மீது மனைவி பரபரப்பு புகார்.. வரதட்சணை கொடுமை, தனிமை காட்சிகள் வீடியோ எடுத்து மிரட்டல்., அதிர்ச்சி தகவல் அம்பலம்.!
இருவரும் விபத்தில் பலி
லோகேஷும், அவரின் நண்பரான பிரசன்னாவும் (வயது 15) புறப்பட்டுச் சென்றபின், நள்ளிரவு 1 மணியளவில் விபத்தில் சிக்கினர். விபத்து குறித்து கிடைத்த தகவலின்பேரில், அதிகாரிகள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களின் மரணம் உறுதி செய்யப்பட்டது.
இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, காரை போதையில் இயக்கி வந்த ஐடி ஊழியர் என இரண்டு வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிறார்கள் இருவரும் பலியான சோகம் நடந்துள்ளது.
இதையும் படிங்க: கோவை மத்திய சிறையில் அதிர்ச்சி சம்பவம்: 45 வயது கைதி மர்ம மரணம்.!