ARTICLE AD BOX
டிபன், மதிய உணவு, இரவு உணவு எதுவாக இருந்தாலும, அதற்கு ஒரே சைடிஷ், வடை தான். ‘என்ன வடை…’ என்று நகைச்சுவையாக சொன்னாலும், வாயில் வடை சுட்டாலும், சுடச்சுட வடை சுட்டால், அதன் ருசியே, தனி ருசி தான். அதிகாலையில் தொடங்கி, இரவு வரை, இல்லங்களிலும், உள்ளங்களிலும், கடைகளிலும் எண்ணெய் குளியல் போட்டுக் கொண்டிருக்கும் மெது வடை எனப்படும் உளுந்து வடையை எப்படி தயாரிக்கலாம்? அதுவும் கடைக்கு இணையாக, அதற்கும் மேலாக.. இதோ பார்க்கலாம்.
- வடைக்கு தேவையான பொருட்கள்
- உளுந்து பருப்பு - 1 கப்
- உப்பு - தேவையான அளவு
- பச்சை மிளகாய் - 2-3 (நறுக்கவும்)
- கறிவேப்பிலை
- கறிவேப்பிலை இலைகள் - ஒரு கை
- சின்ன வெங்காயம் - 4-5 (தரையாய் நறுக்கவும், விரும்பினால்)
- கொத்தமல்லி இலைகள் - ஒரு கைப்பிடி
- எண்ணெய் - தேவையான அளவு
இப்போ தயாரிக்கலாம் வாங்க
சுத்தமான நயம் உளுந்து பருப்பை வாங்கிக் கொள்ளுங்கள். வாங்கி உளுந்தை சுத்தமாக கழுவி, 3-4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். உளுந்து ஊறியதும், அதை அள்ளி, மிக்சியில் சற்று தண்ணீர் சேர்த்து, நன்றாக அரைக்கவும். மாவு ஒரு மிருதுவான பதத்திற்கு வரும் வரை அரைப்பதை உறுதி செய்யவும். அதிகம் தண்ணீர் சேர்க்காமல் கவனமாக மாவை பார்த்துக் கொள்ளவும்.
இப்போது மாவு அரைத்த பின், மாவில் உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் (விருப்பமெனில்), மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து நன்கு கலக்கவும். கைவெளியில் இலை அல்லது எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் காகிதத்தை தட்டையாக வைத்துக் கொள்ளவும். சிறு அளவு மாவை எடுத்து, மெதுவாக தட்டிக் கொள்ளவும். தட்டிய மாத்திரத்தில் மாவு தட்டையின் நடுவில் சிறிய துளை செய்வது கூடுதல் அழகுக்காக உகந்தது.
முன்னதாக நல்ல அகலமான கடாயில் எண்ணெய் ஊறு்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் மாவை தட்ட ஆரம்பிப்பது நல்ல. இப்போது கடாய் சூடான நிலையில் ஏற்கனவே தட்டி வைத்திருக்கும் வடை மாவுவை, சூடான கடாயில் ஒவ்வொன்றாக போடவும். வடையை கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். கருகிவிடவோ, ஒரு பக்கம் மட்டும் வெந்துவிடவோ கூடாது. இருபுறமும் பொன்னிறமாகும் வரை எண்ணெயில் வறுக்கவும்.
வடை வெந்த பின், மொறு மொறு மெது மெது உளுந்து வடை உங்களுக்கு தயாராகி விடும். சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறினால், வடையின் சுவை, இடைவிடாது இருக்கும். டிபன், மதிய உணவு, இரவு டிபன் என எதுவானாலும் வடையை மறுக்காமல், சாப்பிடுபவர்கள் யார் தான் இல்லை!

டாபிக்ஸ்