ARTICLE AD BOX
கணவன், மனைவி இடையே இரவில் உறவு வலுப்பட, மருத்துவர்கள் சில குறிப்புகளை முன் வைக்கின்றனர். இவை பொது பலன்களாக தெரிந்தாலும், உங்கள் சுய பலன்களுக்கு இவை பெரிதும் உதவும் என்பதால், நீங்களும் உங்கள் துணையும், இதை முயற்சி செய்து பாருங்கள். தள்ளிப்படுக்க எதற்கு படுக்கை? நெருக்கத்தை அதிகரித்து, உங்கள் உள்ளத்தை ஒருங்ககிணையுங்கள். அதற்கு மருத்துவர்கள் கூறும் சில இலவச சூத்ரா டிப்ஸ் இதோ:
1.மனதளவில் தயாராகுங்கள்:
மன அழுத்தத்தை குறைத்து, அமைதியான மனநிலையுடன் இரவை அணுகுங்கள். இது உங்களை மூளையை முதலில் தயார்படுத்தும். படுக்கைக்குச் செல்வதற்கு முன், மனதை அமைதிப்படுத்தும் செயல்களில் ஈடுபடுங்கள். புத்தகம் படித்தல், இசை கேட்பது, தியானம் செய்தல் போன்றவற்றை முயற்சி செய்து பாருங்கள். உங்கள் துணையுடன் இரவு உணவுக்குப் பின் சிறிது நேரம் மனம் திறந்து பேசுங்கள். உங்கள் தேவைகள் மற்றும் விருப்பங்களை வெளிப்படுத்துங்கள்.
2. உடல் ரீதியான நெருக்கம்
தாம்பத்தியத்திற்கு முன், மென்மையான தொடுதல்கள் மற்றும் அரவணைப்புகள் மூலம் நெருக்கத்தை அதிகரியுங்கள். இது உங்களையும், உங்கள் துணையையும் ஒரு தூண்டுதலுக்கு தள்ளும். முத்தங்கள் மற்றும் கட்டிப்பிடித்தல் போன்ற செயல்கள், அன்பையும் நெருக்கத்தையும் வெளிப்படுத்தும். உடல் ரீதியான நெருக்கம், மனதையும் உடலையும் தாம்பத்தியத்திற்கு தயார்படுத்தும்.
3. புதிய முயற்சிகள்
தாம்பத்தியத்தில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு, ஆர்வத்தை தூண்டுங்கள். உங்கள் கணவரிடமோ, மனைவியிடமோ கூச்சம் எதற்கு? புதிய இடங்கள், நேரங்கள் அல்லது முறைகளை முயற்சி செய்து பாருங்கள். துணைவருடன் கலந்து பேசி, இருவருக்கும் விருப்பமான புதிய விஷயங்களை முயற்சி செய்யுங்கள்.
4. உணர்வுப் பகிர்வு
உடலுறவுக்குப் பின் உங்கள் வேலையை பார்த்து கிளம்ப வேண்டாம். சிறிது நேரம் துணைவருடன் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். அன்பான வார்த்தைகள் மற்றும் பாராட்டுக்கள், பேச்சுக்கள் உங்கள் உறவை மேலும் வலுப்படுத்தும். இருவரும் மனம் திறந்து பேசுவதன் மூலம், பரஸ்பர உங்களுக்கள் ஒரு புரிதல் ஏற்படலாம்.
5. ஆரோக்கியமான வாழ்க்கை முறை
சரியான உணவு மற்றும் உடற்பயிற்சி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நன்கு தூங்கி எழுங்கள். மன அழுத்தம் குறையும் போது, பொதுவாகவே தாம்பத்தியத்தில் ஆர்வத்தை அதிகரிக்கும். புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கங்களை தவிர்ப்பது தாம்பத்யத்திற்கு மிக நல்லது.
6. மருத்துவ ஆலோசனை
தாம்பத்தியத்தில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். அதில் கூச்சம், பயம், குழப்பம் வேண்டாம். மருத்துவரின் ஆலோசனை, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

டாபிக்ஸ்