ARTICLE AD BOX
Donald Trump: உக்ரைனுடனான மூன்று வருடப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மூன்றாம் உலகப் போர் “அவ்வளவு தொலைவில் இல்லை” என்று எச்சரித்துள்ளார்.
மியாமியில் நடந்த எதிர்கால முதலீட்டு முயற்சி நிறுவன முன்னுரிமை உச்சி மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “மூன்றாம் உலகப் போர் வெகு தொலைவில் இல்லை” என்று எச்சரித்தார், ஆனால் எனது தலைமையிலானா அரசு அதை நடக்காமல் தடுக்கும் என்று கூறினார். ஆனால், முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் தொடர்ந்திருந்தால், உலகம் போரில் மூழ்கியிருக்கும் என்று டிரம்ப் கூறினார்.
“போர்களை முடிவுக்குக் கொண்டுவர”, மோதல்களைத் தீர்க்க மற்றும் உலகத்தை அமைதிக்கு மீட்டெடுக்கும் முயற்சிகள் உலகெங்கிலும் வேகமாக நகர்ந்து வருவதாகக் கூறினார். ஏனெனில், அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை” பார்க்க தான் விரும்பவில்லை என்று கூறினார். உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே புதன்கிழமை பேச்சுவார்த்தைகளை நடத்தி ஆதரித்ததற்காக சவுதி அரேபியாவிற்கு நன்றி தெரிவித்த டிரம்ப், பேச்சுவார்த்தைகள் “பெரிய படி” என்றும் கூறினார்.
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை குறிவைத்து ரஷ்ய தொனியில் பேசிய டிரம்ப், அவரை “ஒரு சாதாரணமான வெற்றிகரமான நகைச்சுவை நடிகர்” மற்றும் “தேர்தல்கள் இல்லாத சர்வாதிகாரி” என்று குறிப்பிட்டார். மத்திய கிழக்கில் நடக்கும் மரணங்கள் மற்றும் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் மரணங்களைப் பற்றி விரிவாகப் பேசிய டிரம்ப், “மத்திய கிழக்கில் நடக்கும் மரணங்களையும், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் மரணங்களையும் பாருங்கள், நாங்கள் அதை முடிவுக்குக் கொண்டுவரப் போகிறோம்” என்று கூறியதாக சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது.
The post “மூன்றாம் உலகப் போர் வெகு தொலைவில் இல்லை”! எச்சரிக்கும் அதிபர் டொனால்ட் டிரம்ப்! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.