மும்மொழிக் கொள்கையா... இந்தித்திணிப்பா? எச்.ராஜா மீது சட்ட நடவடிக்கை பாயுமா?

6 hours ago
ARTICLE AD BOX

மும்மொழிக் கொள்கையில் எந்த மொழியையும் கற்கலாம். இந்தித்திணிப்பு என்று திமுக அரசியல் செய்கிறது என்று பாஜகவினர் டெல்லி முதல் குமரி வரையிலும் ஆவேசமாகப் பேசி வருகிறார்கள். இந்நிலையில் பள்ளி மாணவ மாணவிகளை அழைத்து இந்தி மொழி படிக்கனுமா வேண்டாமா கேட்டு குழந்தைகளை வேண்டும் என்று சொல்லச் சொல்லி,  நேரடியாக் இந்தித்திணிப்புக்கு ஆதரவு திரட்டியுள்ளார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா. இந்த காணொலி சமுகத் தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இந்தக் குழந்தைகள் யார் அழைத்து வந்தது? கட்சிக்காரர்களின் குழந்தைகளா? பெற்றோர்களின் அனுமதியுடன் தான் குழந்தைகள் வந்தார்களா? குழந்தைகளிடம்  இந்தி மொழி வேண்டுமா என்று இப்படிக் கேட்பது சட்டப்படி சரிதானா? என்ற கேள்விகள் ஒரு புறம் இருக்க. மும்மொழிக் கொள்கை என்று சொல்லிவிட்டு நேரடியாக இந்தி மொழிக்கு ஆதரவு திரட்டும் பாஜகவின் உண்மை முகம் தெரிந்து விட்டது என்று பாஜக சமூகத்தளங்களில் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. சிறுவர்களை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தியதற்கு எச்.ராஜா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்துள்ளனர்.

மும்மொழி என்றால் இந்தித்திணிப்பு அல்ல எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம்னு உருட்டுன சங்கிகளின் உண்மை முகம் இதோ

pic.twitter.com/VXemg9lHZJ

— Alíén 👽 (@Alien18R) March 21, 2025


 

Read Entire Article