முன்னேற உதவும் முத்தான மூன்று பண்புகள்..!

22 hours ago
ARTICLE AD BOX

பூமி சுழலும்  வரையில், அதில் மனித இனம் இருக்கும்வரை முன்னேற்றம் இருக்கும்.  போட்டியும்  பொறாமையும் கூடவே பயணம் செய்யும்.

விஞ்ஞானம் ஒவ்வொரு வினாடியும் புதுப் புது கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுத்து வந்தாலும்,  ஒன்று மட்டும் நிச்சயம் மனித இனம் இல்லாவிட்டால் விஞ்ஞானமும் இல்லை.

விஞ்ஞானம் கண்டுபிடிக்க, பயன்படுத்த, அனுபவிக்க, அழிக்க என்று எல்லா கட்டங்களிலும் மனித இனத்தின் ஆக்கிரமிப்பு அவசியம்.

மனித வாழ்க்கையில் முன்னேற பின்பற்ற வேண்டிய மூன்று முத்தான பண்புகள் பற்றி காண்போம்.

முதலாவது கான்பிடென்ஸ் (Confidence) நம்பிக்கை வைப்பது.  எதன் மீது நம்பிக்கை வைக்கவேண்டும் என்ற வினாவிற்கான பதில் சுலபமானது. தன் மீதே நம்பிக்கை வைக்கவேண்டும்.  தனி மனிதனால் முடியாதது  ஒன்றும் இல்லை. இல்லாவிட்டால்  இந்த  அகண்ட பூமியில் இவ்வளவு வளர்ச்சி மற்றும் முன்னேறங்களை  பல்வேறு துறைகளில் காணமுடியுமா.

சுயநம்பிக்கை (self faith) பண்பை மிக்க நம்பிக்கையோடு வளர்த்துக் கொள்ளுதல் அவசியம் மட்டும் அல்லாமல் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் எழுத்தில் விவரிப்பதோடு சுயஅனுபவத்தின் மூலம் தெரிந்துக் கொண்டு புரிந்துக்கொண்டு பயனை பெற்று பூரிப்பு அடைந்தால்தான் சுயநம்பிக்கையின் அருமை பெருமை ஆழமாாக புலப்படும்.

எத்தகைய வகை சூழ்நிலையிலும் நம்பிக்கை இழக்காமல் இருக்க கட்டாயம் பழகிக்கொள்ளவேண்டும். அதன் மகிமை பிரச்னைகளை எதிர்கொள்ளும் பொழுது சரிவர புரியும், உதவும்.

The first three characteristics that help to progress..!
மனித மனதின் ஆற்றலுக்கு அளவு கிடையாது!

இரண்டாவது தேவையான பண்பு கான்சென்ட்ரேஷன் (Concentration) எடுத்துக்கொள்ளும் பணியில் முழு ஆழ்ந்த கவனம் ஈடுபாடு தேவை. அது எந்தவகை பணி, தொழிலாக இருந்தாலும் கவனம் சிதறாமல் முழுமனதுடன் அர்ப்பணித்துக்கொண்டு செயல்பட நடவடிக்கை  எடுத்தால் உழைப்பு, நம்பிக்கை ஆகியவற்றிற்கு வெற்றி என்ற கனி கிடைப்பது உறுதி.

படிப்பது, அறிந்துக் கொள்வது, புரிந்துக் கொள்வது போன்றவை தனி மனிதரை உருவாக்க உதவினாலும், முழு கவனத்துடன் செய்யும் தொழிலில் முழுவதுமாக செயல்படுபவர்கள் தனித்து காணப்படுவதுடன் அடுத்த கட்டத்திற்கு சென்று மேலும் சாதிப்பார்க்கள்.

முழு கவன ஈடுப்பாடு அவர்களுக்கு தேவையான உத்வேகம் அளித்தும் உதவும்.

அறிவு மிகவும் முக்கியம். பொது அறிவு குணம் (Commonsense ) பல நேரங்களில் இக்கட்டான சூழ்நிலைகள், பிரச்னைகளை அனுபவத்தால் ஆதரிக்கப்படும் பொது அறிவு அடிப்படையில் தீர்க்கப்படும்.

ஒவ்வொரு மனிதனும் பயன்படுத்த வேண்டிய குணம் பொது அறிவை சிறப்பாக உபயோகிக்க வேண்டியது ஆகும்.

தேவை அறிந்து மனதை செலுத்தி குறிப்பிட்ட பிராப்ளத்தை எவ்வளவோ நபர்கள் தங்களுடைய காமன் சென்ஸ் திறமையினால் விடுவித்து இருக்கின்றனர். இத்தனைக்கும் அப்படிப்பட்டவர்களில் பலர் படிப்பில் பல பட்டங்கள் பெற்றவர்கள் அல்லர். வாழ்க்கையில் கண்ட அனுபவம், வளர்த்துக்கொண்ட சூழ்நிலைக்கு ஏற்ப சுயமாக சிந்திக்கும் திறமை ஆகியவைகளுடன் தன்னம்பிக்கையும் அவர்களுக்கு உறு துனையாகவும் இருக்கின்றன.

சாதித்து முன்னேற முயலும் ஓவ்வொருவரும் தன்னால் முடியும் என்று நம்பவேண்டும். அதற்கு தகுந்தார்போல் தயார் செய்து கொள்ளவேண்டும் ஈடுபாட்டுடன். எதிர்வரும் இன்னல்கள், தடங்கல்கள் ஆகியவற்றை சந்தித்து கடந்து செல்ல பழகிக் கொள்ளவேண்டும்.

The first three characteristics that help to progress..!
நம் மனதை நெகிழ வைப்பது எது தெரியுமா?

செயல்பட்டு முன்னேற சுயநம்பிக்கையை வலுவாக்கிக் கொண்டு, முழுகவனம் சிதறாமல் ஈடுப்பட்டு, பொது அறிவை தேவையான சூழ்நிலையில் பயன்படுத்தி அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

Read Entire Article