ARTICLE AD BOX
Venus Transit in Pisces 2025 Palan Tamil : கும்பத்திலிருந்து மீனத்திற்கு பெயர்ச்சி ஆகும் சுக்கிரன் பகவானின் ராசி மாற்றத்தால் 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட போகிறது.
Venus Transit in Pisces 2025 Palan Tamil : சுக்கிர ராசி பலன் ஜனவரி 2025: சுக்கிரனின் சுப பலன்களால் தான் பணம், சொத்து, மனைவி சுகம் போன்ற அனைத்துப் பொருள் சுகங்களையும் பெறுகிறோம். இந்த கிரகம் தற்போது கும்ப ராசியில் உள்ளது. ஜனவரி 28ஆம் தேதி நாளை சுக்கிரன் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குள் நுழையும். இதனால் 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடித்தது போலவும், மிகுதியான பணவரவு கிடைக்கும். அந்த 4 ராசிகள் எவை என்று தெரிந்துகொள்வோம்…
சதாபிஷா நட்சத்திரத்தில் சுக்கிரன்: தங்க சுரங்கமே நீங்க தான்: வீடு தேடி வரும் அதிர்ஷ்டம்!
ரிஷப ராசிக்காரர்களுக்கு பணவரவு:
இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் ராசி மாற்றத்தால் நல்ல பண வரவு கிடைக்கும். நீண்ட நாள் நிலுவையில் இருக்கும் சொத்து பிரச்சனைகள் தீரும். காதல் வாழ்க்கை முன்பை விட மிகவும் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையில் நல்ல புரிதல் இருக்கும். உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். நீங்கள் நினைத்த காரியங்கள் நிச்சயம் நிறைவேறும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்:
சுக்கிரனின் ராசி மாற்றத்தால் அதிர்ஷ்ட காத்து உங்கள் பக்கம் வீசப்போகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு முழு அதிர்ஷ்டம் கிடைக்கும். பணம் சம்பந்தமான லாபங்கள் மட்டுமல்ல, சமூகத்தில் மரியாதையும் கிடைக்கும். கணவன்-மனைவி காதல் பயணம் செல்லலாம். குழந்தைகள் சம்பந்தமான நல்ல செய்தி அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும். இந்த நேரத்தில் அவர்கள் எந்த வேலையைச் செய்தாலும் வெற்றி கிடைக்கும். இத்தனை நாட்களாக வேலை இல்லை என்ற கவலை வேண்டாம். இனி உங்களுக்கு அடுத்தடுத்து வேலை வந்து கொண்டே இருக்கும்.
துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி
சுக்கிரன் ராசி மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு நல்ல செய்தி கிடைக்கும். பெற்றோரின் ஒத்துழைப்புடன் நிறுத்தி வைக்கப்பட்ட பணிகள் நிறைவேறும். எதிர்காலத்தில் அவர்களுக்கு நன்மை பயக்கும் புதிய வேலையையும் தொடங்கலாம். பங்குச் சந்தையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அமோக லாபம் கிடைக்கும்.
12 ஆண்டுகளுக்கு பிறகு மீனத்தில் சுக்கிரன் புதன் சேர்க்கை: 69 நாட்கள் நீங்க எங்கயோ போக போறீங்க!
மகர ராசிக்காரர்கள் சொத்து வாங்குவார்கள்
இந்த ராசிக்காரர்கள் எதிர்காலத்தில் அவர்களுக்கு நல்ல லாபம் தரும் பெரிய சொத்தை வாங்கலாம். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டம் அவர்களை எல்லா வகையிலும் ஆதரிக்கும், மேலும் இந்த நேரத்தில் செய்யப்பட்ட முதலீடுகளுக்கு எதிர்காலத்தில் நல்ல பலன் கிடைக்கும். மனைவி சுகம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. சுக்கிரன் உங்களின் வாழ்க்கைக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து கொடுக்க போகிறார். இனி நீங்கள் ஹேப்பியா வாழ போறீங்க.
பிப்ரவரி 1 முதல் 3 ராசிகளுக்கு லட்சாதிபதி யோகம்: காதல் நாயகன் சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி பலன்கள்!