ARTICLE AD BOX
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3வது டி20 போட்டி ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா ஸ்டேடியத்தில் நாளை நடைபெற உள்ளது. இந்த மைதானத்தின் பிட்ச் ரிபோர்ட், சாதனைகள் குறித்து பார்க்கலாம்.
இந்தியா-இங்கிலாந்து டி20 தொடர்
சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கபப்ட்ட 20 ஓவரகளில் 9 விக்கெட் இழந்து 165 ரன்கள் எடுத்தது. பின்பு விளையாடிய இந்திய அணி 19.2 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மா அதிரடி அரைசதம் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்கள். இந்தியா இங்கிலாந்து இடையிலான 3வது டி20 போட்டி ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா ஸ்டேடியத்தில் நாளை (28ம் தேதி) நடைபெற உள்ளது.
இந்திய அணி சூப்பர் பார்ம்
இதல் இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இந்த போட்டியில் வெற்றிவாகை சூடி தொடரை வெல்ல தயாராக உள்ளது. இந்திய அணியில் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, 2வது போட்டியின் நாயகன் திலக் வர்மா ஆகியோர் சூப்பர் பார்மில் உள்ளனர். பவுலிங்கில் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
அதே வேளையில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதேபோல் ஹர்திக் பாண்ட்யாவும் பேட்டிங்கும் மெச்சும்படி இல்லை. இங்கிலாந்து அணியை பொறுத்தவரை கடந்த போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சர் தவிர மற்ற அனைவரும் சிறப்பாக பந்து வீசினார்கள்.
ஆனால் பேட்டிங் மோசமாக இருக்கிறது. கேப்டன் ஜோஸ் பட்லர் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் இந்திய ஸ்பின்னர்களை கணிக்க முடியாமல் தடுமாறி வருவது பின்னடைவாக அமைந்துள்ளது.
'பிசிசிஐ தேர்வுக்குழுவில் இருக்க விரும்ப மாட்டேன்'; காரணத்தை சொன்ன அஸ்வின்!
பிட்ச் யாருக்கு சாதகம்?
3வது டி20 போட்டி நடைபெறும் ராஜ்கோட் நிரஞ்சன் ஷா மைதானத்தில் இதுவரை 5 டி20 போட்டிகள் நடந்துள்ளன. முதலில் பேட்டிங் செய்த அணி 3 முறையும், சேஸிங் செய்த அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த மைதானம் சுமார் 28,000 பேர் அமரக்கூடிய திறன் கொண்டது. நிரஞ்சன் ஷா ஸ்டேடியத்தில் உள்ள பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமானதாகும். அதே வேளையில் பாஸ்ட் பவுலிங்குக்கும் ஒத்துழைக்கும். பிட்ச்சில் நல்ல பவுன்ஸ் இருக்கும்.
முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் அதிக ரன்களை குவிக்க முடியும். பிட்ச்சின் தட்டையான மற்றும் கடினமான தன்மை பேட்ஸ்மேன்களுக்கு தொடக்கத்தில் உதவும். போகப் போக பேட்டிங் செய்ய கடினமாக இருக்கும். ஆகவே இந்த பிட்ச் 2வது பேட்டிங்குக்கு சற்று கடினமானது. இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் ஆவரேஜாக 189 ரன்கள் அடித்துள்ளன.
அதிக ரன்கள் என்ன?
இந்த மைதானத்தில் இந்திய அணி இலங்கைக்கு எதிராக 228/5 என அதிகப்பட்ச ரன்களை பதிவு செய்துள்ளது. குறைந்தபட்சமாக கடந்த 2022ம் ஆண்டு தென்னாபிரிக்கா அணி இந்தியாவுக்கு எதிராக 87 ரன்களில் சுருண்டு இருக்கிறது. இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் ராஜ்கோட் மைதானத்தில் இலங்கைக்கு எதிராக 51 பந்தில் அதிரடி சதம் (112 ரன்கள்) விளாசி தனிநபர் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார்.
பவுலிங்கில் ஆவேஷ் கான் 2022ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 22 ரன்களுக்கு 4 விக்கெட் வீழ்த்தி கலக்கியுள்ளார். கடைசியாக இந்த மைதானத்தில் நடந்த போட்டியில் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை பந்தாடி உள்ளது.
கேப்டன்சியில் 'ஹீரோ'; பேட்டிங்கில் 'ஜீரோ'; படுமோசமாக விளையாடும் சூர்யகுமார்; ரசிகர்கள் கவலை!