ARTICLE AD BOX
சென்னையில் உள்ள மாநகராட்சி பகுதியில் கொசு ஒழிப்பு பணிகளுக்கு, ஆட்களை பணியமர்த்தி, கவுன்சிலர் மற்றும் உயரதிகாரிகள் வீட்டு வேளைக்கு பயன்படுத்துவதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. அதேபோல, அவர்களின் ஊதியத்தில் கமிஷன் தொகை பெற்றுக்கொள்வதாகவும், கமிஷன் கொடுக்காதவர்களை பணியில் இருந்து நீக்குவதாக மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.
சென்னை மாநகர பகுதிகளில் வசித்து வரும் அரசியல்புள்ளிகள், அரசு அதிகாரிகள், எம்.எல்.ஏ, கவுன்சிலர் ஆகியோரின் வீடுகளில் இருக்கும் முதியோர்களை கவனிக்கவும் மாநகராட்சி செவிலியர்களும் பயன்படுத்தப்படுகின்றனர். கொசு ஒழிய பணியில் 38000 முன்கள பணியாளர்கள் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: #Breaking: தந்தை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை.. வாட்ஸப்பில் தகவல்.. இரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்.. சென்னையில் பயங்கரம்.!
பிற பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்
கடந்த 8 ஆண்டுகளாக தினக்கூலி அடிப்படையில் ரூ.300 முதல் ரூ.350 வரை நாள் ஒன்றுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. இவர்கள் நோய்களை தடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பேரிடர் காலத்திலும் பணியமர்த்தப்படுகின்றனர். இந்நிலையில், கொசு ஒழிப்பு பணிகள் நிறைவுபெற்றபின்னர், அரசியல் பிரமுகரின் வீட்டில் பணியமர்த்த வைக்கப்படுகின்றனர்.
குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களை, கூடுதல் வேலை கொடுத்து, அவர்களின் சம்பளத்தில் கமிஷனும் பிடித்து கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற பணிகளிலும் அவர்கள் ஈடுபடத்தப்படுகிறார்கள். தங்களின் உதவுக்கு கீழ்ப்படியாத பட்சத்தில், அவர்களை பணியில் இருந்து நீக்குவோம் எனவும் மிரட்டல் விடுக்கப்படுகிறது.
இதையும் படிங்க: பேண்ட் ஜிப்பை அவிழ்த்து பொது இடத்தில் ஜஸ்டின் செய்த செயல்.! அலறித்துடிக்க ஹாஸ்பிடலில் அனுமதி.!