ARTICLE AD BOX
சர்க்கரை நோயாளிகள் அதிகம் சமைக்காமல் காலையில் எடுத்துக்கொள்ளக்கூடிய உணவுகள் குறித்தும், அதில் முன்தினம் இரவே ஊறவைத்து ஓட்ஸ் சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரிக்காது என்று டாக்டர் அருண் கார்த்திக் கூறுகிறார்.
பெரும்பாலான வீடுகளில், கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்கிறபோது, காலையில் அவசர அவசரமாக காலை உணவு ஏதாவது ஒன்றை சமைத்து சாப்பிட்டுவிட்டு, அதையே மதிய உணவுக்கும் எடுத்துச் செல்வார்கள். வீட்டில் குழந்தைகளுக்கும் காலை உணவு மற்றும் பள்ளிக்கு மதியம் உணவாக அதையே கொடுத்து அனுப்புவார்கள். அப்படி சமைக்கிற உணவு பெரும்பாலும், அரிசியை சமைத்து, அதற்கு சாம்பார், பொரியல் என்றுதான் இருக்கும். இதனால், சர்க்கரை அளவு அதிகமாகவே இருக்கும்.
வேலைக்குச் செல்லும் கணவன், மனைவி இருவரும் ஒருவேளை அவர்கள் சர்க்கரை நோயாளிகளாக இருந்தால், அவர்களுக்கு சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்காது. அதனால், சக்கரை அளவைக் கட்டுப்படுத்த காலையில் அதிகம் சமைக்காத, சர்க்கரை அளவை அதிகரிக்காத உணவு எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதனால், அதிகம் சமைக்காத, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் உணவுகளை டாக்டர் அருண் கார்த்திக் கூறுவை இங்கே பார்ப்போம்.
காலை உணவாக, முழுக்க கோதுமையில் செய்த பிரட்டில், காய்கறிகள், வேக வைத்த முட்டை, சர்க்கரை இல்லாத ஜாம் வைத்து சாண்ட்விச் எடுத்துக்கொள்ளலாம். இது ஆரோக்கியமான உணவாக இருக்கும். இதை தயார் செய்ய அதிக நேரம் எடுக்காது. இதை காலையில், மதியம், இரவு உணவாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், மிட் மார்னிங் ஸ்நாக்ஸ் ஆகவோ ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆகவோ எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கூறுகிறார்.
இரண்டாவது ஓட்ஸ், ரோல்டு ஓட்ஸ் (Rolled Oats) என்று எல்லா கடைகளிலும் கிடைக்கிறது. இதில் ஓட்ஸை மிதமாக வேகவைத்து உருட்டி செய்யப்படுவதுதான் ரோல்டு ஓட்ஸ். இந்த ரோல்டு ஓட்ஸில் அதிகம் நார்ச்சத்து உள்ளது. இந்த ரோல்டு ஓட்ஸையும் சமைக்காமல் சாப்பிடுவது என்றால், முன்தினம் இரவே ஊறவைத்துவிட வேண்டும். அந்த தண்ணீரை வடிகட்டிவிட்டு, பாலில் போட்டு 2-3 நிமிடம் கொதிக்கவிட்டால், சாப்பிடுவதற்கான ஓட்ஸ் தயார். இப்படி செய்த ஓட்ஸில் பருப்பு, பழங்கள் போட்டு சாப்பிடலாம். இது நார்ச்சத்து நிறைந்த உணவு. சுகர் ஏறாது என்று டாக்டர் அருண் கார்த்திக் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.