முத்துவிடம் மாட்டிய மனோஜ்; மீனா கையில் ரத்த காயம்: சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று!

19 hours ago
ARTICLE AD BOX

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புடன் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இன்றைய எபிசோட்டில் மீனா ஒரு விஷயத்தை கண்டுபிடிக்க, கல்யாணத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

இன்றைய எபிசோடின் தொடக்த்தில் முத்து தான் குடிக்கவில்லை என்று நிரூபித்து விட்ட நிலையில், குடித்துவிட்டு திரிந்த 2 குடிகாரர்களை கண்டுபிடித்து உண்மையை சொல்ல வைக்கிறான் முத்ல. இதனால்,  மீனா முத்துவிடம் மன்னிப்பு கேட்கிறார். அப்போது முத்து, ரவியிடம் நான் உன்கிட்ட என்னைக்காவது பொய் சொல்லி இருக்கேனாடா? நீயும் என்னை நம்பல இல்ல என்று கேட்க, அதற்கு ரவி அண்ணி வந்து சொன்னாங்க அதனால நம்பிட்டேன் என்று மன்னிப்பு கேட்கிறார்.

அப்போது மீனா உங்க அண்ணன் தான் நீங்க குடிச்சி இருக்கிறதா உங்க அம்மா அப்பா கிட்ட சொல்லி இருக்காரு என்று சொல்ல, அந்த ஓடுகாளி தான் எல்லாத்துக்கும் காரணமா அவ எங்க இருக்கா என்று தேடிக்கொண்டு போகிறார். அப்போது ரோகிணியும் மனோஜும் போட்டோ எடுத்துக் எடுக்கிறார்கள். முத்து மனோஜின் ஃபோனை புடுங்கி கொண்டு நான் குடிக்கவில்லை என்று இப்போ நிரூபணம் ஆகி இருக்கு நீ என்கிட்ட மன்னிப்பு கேளுடா என்று மிரட்டி கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக ஒரு கணவன் மனைவி மண்டபத்தில் வந்து அங்கே இருப்பவர்களின் நகைகளை திருடுவதற்காக பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மறுபக்கத்தில் பரசு மீனாவிடம் முகூர்த்தத்திற்கு நேரமாயிடுச்சு பொண்ணை கூட்டிட்டு வாமா என்று சொல்ல, முத்து அண்ணாமலையிடம் கொண்டிருக்கிறார். அப்போது நீ மீனாவை திட்டினியா என்று அண்ணாமலை கேட்க, அதற்கு முன்னாடிலாம் நான் குடிச்சிட்டு வந்தா கூட மீனா கண்டுபிடிச்சுக்க மாட்ட ஆனா இப்போ நான் குடிக்காமலே என்னை திட்டிட்டா என்று சொல்கிறார்.

Advertisment
Advertisements

இதை கேட்ட அண்ணாமலை ஒரு தடவை தப்பு பண்ணி அடுத்தவங்களை கஷ்டப்படுத்திட்டா எப்பவும் இவங்க இப்படித்தான் இருப்பாங்க என்ற ஒரு சிந்தனை எல்லோருக்கும் வந்துடும் சரி விடு என்று சொல்கிறார். மணப்பெண் பவானியை கூட்டிக்கொண்டு வருவதற்காக ரூமிற்குள் போக அங்கிருந்த திருட்டுபெண் சொந்தக்காரர்கள் போல சகஜமாக பேசுகிறார். அந்தப் பெண் கதவை பூட்டிக் கொண்டு வரேன் என்று போகும் போது கையில் இருந்த கத்திரிக்கோல் கீழே விழுகிறது. இதனால் மீனாவுக்கு சந்தேகம் வர, நீங்க யாரு உங்களுக்கு என்ன சொந்தம் என்று கேட்க, நான் மாப்பிள்ளையோட அக்கா நாத்தனார் என்று சொல்லி சமாளிக்கிறார். ஆனாலும் மீனாவுக்கு சந்தேகம் வந்துவிட்டது.

கொஞ்ச நேரத்தில் முத்துவிடம் சென்று எனக்கு சந்தேகமா இருக்கு ஒரு பொண்ணு மாப்பிள்ளையோட அக்கா நாத்தனார்னு சொன்னாங்க. கையில கத்திரிக்கோல் வச்சிருந்தாங்க. மாப்பிள்ளைக்கு தான் அக்காவே கிடையாதே என்று சொல்ல, முத்து நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி அனுப்புகிறார். பிறகு முகூர்த்தம் முடிந்ததும் ஸ்ருதி மற்றும் ரவி  அண்ணாமலை, விஜயாவும் கிளம்புகிறார்கள். முத்து மீனா மண்டபத்தில் இருந்து அந்த லேடியை தேடி பார்க்க மீனா பேக்குடன் அவர் போவதை பார்த்து பின் தொடர்கிறார்.

பிறகு முத்துவும் வந்து அவர்களை மடக்கி பிடிக்கப் போகிறார்கள். மாட்டிய திருடர்கள் அவர்கள் முத்து மற்றும் மீனாவை ஏமாற்றிவிட்டு ஒரு ஆட்டோவில் ஏறுகிறார்கள். அப்போது முத்து அந்த ஆட்டோவை நிறுத்தி போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்கிறார் உடனே அவர்கள் ஆட்டோவில் இருந்து இறங்கி வெளியே ஓடுகிறார்கள். மீண்டும் மீனாவும் முத்துவும் அவர்களை பின்தொடர்ந்து ஓடும்போது மீனா கையில் அந்த பெண் வெட்டி விடுகிறார்.ஆனாலும் நகை பையை மீனா பிடித்துக் கொள்கிறார்.

பிறகு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லோரும் அந்த பெண் பின்னாடி சிலர் ஓட மீனா கையில் இருந்த பேக்கில் எல்லாம் நகையாக இருக்கிறது. இதனால் இவர்கள் திருடன் தான் வந்தார்கள் என்று எல்லோருக்கும் தெரிந்து விடுகிறது. அப்போது பரசுராமன் ரொம்பவும் சந்தோஷப்படுகிறார். அதற்கு முத்து இந்த விஷயத்தை பவானி கிட்ட சொல்ல வேண்டாம் அவ பயந்துருவா இத நாம போலீசுக்கு சொல்லுவோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Read Entire Article