ARTICLE AD BOX
முதுகில் குத்திய நண்பன்.. மகாவை டைவர்ஸ் பண்ணனும்.. உண்மையை உடைத்த ரவீந்தர்!
சென்னை: சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக இருந்த மகாலட்சுமி பின்ர சீரியல்களில் நடித்து பிரபலமானார். இவர் அனில் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில், இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். இதையடுத்து, தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடியை தொடர்ந்து உருவ கேலி செய்து வரும் நிலையில், மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவரும் கூட்டமாக கலாட்டா தமிழ் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளனர்.
அதில், பேசிய மகாலட்சுமி, திருமணத்திற்கு பிறகு பலரும் அவரின் உருவத்தை வைத்துத்தான் கேலியாக பேசி வருகின்றனர். அதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவரை திருமணம் செய்து கொண்டு தானே சந்தோஷமாக வாழ்த்துக்கொண்டு இருக்கும் போது, யாருக்கு என்ன பிரச்சனை அதை ஏன் மற்றவர்கள் குறையாக பேசுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

ரவீந்தர் பதில்: இதுமட்டுமில்லை நாங்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம் என்றெல்லாம் கூட செய்தி வரும். அதைப்பார்த்து நாங்களே சிரித்துக்கொள்வோம். இந்த மாதிரி உடல் அமைப்பு உள்ள ஒருவனை இப்படி அழகான பெண் எப்படி திருமணம் செய்து கொண்டார், இந்த கல்யாணம் இத்தனை நாட்கள் நீடிக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. அது எதுவும் நடக்காததால், விவாகரத்து ஆகிவிட்டது, பிரிந்து விட்டார்கள் என செய்திகளை பரப்பி வருகிறார்கள். ஒவ்வொரு முறை இப்படி செய்தி பரவும் போதும், இல்லை நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என போட்டோக்களை போட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து வருகிறோம். எங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வதில் மற்றவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்றார்.
முதுகில் குத்துபவர்கள்: இதைத்தொடர்ந்து ஷகிலா, முதுகில் குத்தியவர் யார் என்று கேள்வி கேட்டார், அந்த கேள்விக்கு பதில் அளித்த மகாலட்சுமி, என்னை பொருத்தவரைக்கும் முதுகில் குத்துபவர்கள் யார் என்றால், நம்முடன் நெருக்கமாக இருப்பவர்கள், இவங்க தான் எல்லாமே, என நாம் நினைத்த ஒருவர் மட்டும் தான் முதுகில் குத்த முடியும். இதை எதிரி செய்ய மாட்டார்கள், நம்கூடவே இருந்து, நம்மை பற்றி நன்றாக தெரிந்த ஒருவர் மட்டும் தான் முதுகில் குத்துவார்கள். என்னை பொறுத்தவரைக்கும் நம் வாழ்க்கையில், அம்மா, அப்பா,கணவர், குழந்தை இவர்களை தவிர்த்து மற்ற யாரிடமும் எதை பற்றியும் மற்றவர்களிடம் சொல்லாமல் இருந்தால், இதுபோன்று முதுகில் முத்துபவர்களிடம் இருந்து தப்பித்துவிடலாம் என்றார்.