ARTICLE AD BOX
திருவள்ளூர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருமழிசை பேரூர் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேரூர் செயலாளர் தி.வே.முனுசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ப.ச.கமலேஷ், டி.தேசிங்கு, பேரூராட்சி தலைவர் மகாதேவன், பேரூர் நிர்வாகிகள் கருணாநிதி, அமுதா முனுசாமி, நாகதாஸ், குமார், செல்வம், வேந்தன், பார்வதி, அருள், சுரேந்தர், எழிலரசன், இளங்கோவன், சங்கர், சண்முகம், பன்னீர் செல்வம், பார்த்திபன், சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான சா.மு.நாசர், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, பேச்சாளர் வே.மதிமாறன் ஆகியோர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வரின் சாதனை, அரசு திட்டங்கள் குறித்து பேசினர்.
இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள் கே.ஜே.ரமேஷ், சி.ஜெரால்டு, காயத்ரி ஸ்ரீதரன், காஞ்சனா சுதாகர், கவுன்சிலர்கள் விஜயலட்சுமி வேலு, கஸ்தூரி அருள், ஜீவா சதீஷ், அனிதா சங்கர் மற்றும் ரேவதி, மோகன்ராஜ், சரண்யா, நாகராஜ், கோபு, ராஜா, பிரதீபன், தாமோதரன், தேவகுமார், அன்பு, நாகராஜ், தரணி பிரசாத், ஆனந்தராஜ், கோபு, முரளி, கோகுல் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் கங்காதரன், பிரபாகரன் ஆகியோர் நன்றி கூறினர்.
The post முதல்வர் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்பு appeared first on Dinakaran.