மீண்டும் பொய் சொல்லும் அண்ணாமலை... தகவல் சரிபார்ப்பு பிரிவு சொல்வது என்ன?

5 hours ago
ARTICLE AD BOX

தமிழ்நாட்டில் பள்ளிக் கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் தான் இருக்கின்றன. செங்கோட்டையில், அரசுப் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது என்று கூறி விரிவான பதிவு ஒன்றை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருந்தார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. 

அண்ணாமலை மீண்டும் பொய்  சொல்கிறார் என்று தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பு பிரிவு மறுப்பு தெரிவித்துள்ளது. மறுப்பு பதிவில் கூறப்பட்டிருப்பதாவது,

பொய் 1: “கடந்த ஆண்டு பட்ஜெட்டில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 2,497 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டதாகவும், இந்த ஆண்டு ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிலையில், மானியக் கோரிக்கையில் அன்பழகனார் என்ற பெயரே இல்லை” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

உண்மை: 2025 - 26 நிதிநிலை அறிக்கை மீதான மானியக் கோரிக்கை இன்னும் தொடங்கப்படவே இல்லை. 2024 – 25 பள்ளிக்கல்வித் துறையின் மானியக் கோரிக்கையில், அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் 2022 - 23 மற்றும் 2023 - 24 ஆம் ஆண்டுகளில் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.1,887.75 கோடியும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக ரூ.316 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிலும் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொய் 2: “கடந்த 2023 – 2024 ஆம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.560 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒரு ரூபாய் கூடச் செலவு செய்யவில்லை என்பது மானியக் கோரிக்கையில் தெளிவாகிறது.” என அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

உண்மை: ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.429.67 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், 1 ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்று பொய் பரப்பியுள்ளார்.

பள்ளிக் கல்வி : மீண்டும் பொய் சொல்லும் அண்ணாமலை !

பொய் 1: “கடந்த ஆண்டு பட்ஜெட்டில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 2,497 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டதாகவும், இந்த ஆண்டு ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிலையில், மானியக்… https://t.co/A4BQ84JOEI pic.twitter.com/QpEGtKr2zC

— TN Fact Check (@tn_factcheck) March 21, 2025


 

Read Entire Article