ARTICLE AD BOX
தமிழகத்தில் 30 ஆண்டுகளாக கார் உற்பத்தி செய்து வந்த நிலையில் 2022ம் ஆண்டுடன் உற்பத்தியை நிறுத்திவிட்ட ஃபோர்டு (FORD) தமிழகத்தில் மீண்டும் தங்களது கார் இன்ஜின் உற்பத்தியை தொடங்க உள்ளது.சென்னையில் FORD நிறுவனம் கார் இன்ஜின் உற்பத்தி, ஏற்றுமதியை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு அதிகாரிகளுடன் சமீபத்தில் அந்நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு இந்தியாவில் உற்பத்தியை நிறுத்திய நிலையில், 2024ல் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், FORD நிறுவன அதிகாரிகளை சந்தித்து ஃபோர்டு நிறுவனத்தின் உலகளாவிய திறன் மையத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் இந்த சந்திப்பின்போது பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.