ARTICLE AD BOX
மிரளுது பட்ஜெட்.. வெறும் ரூ.1,899 போதும்.. AMOLED டிஸ்பிளே.. IP68 ரெசிஸ்டன்ட்.. ப்ளூடூத் காலிங்.. எந்த மாடல்?
அமோலெட் டிஸ்பிளே, IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட், ப்ளூடூத் காலிங், ஹெல்த் டிராக்கிங், ஹெல்த் மானிட்டரிங் போன்ற பீச்சர்களுடன் பட்ஜெட் விலையில் போட் நிறுவனத்தின் போட் அல்டிமா பிரைம் (boAt Ultima Prime) மற்றும் போட் அல்டிமா எம்பர் (boAt Ultima Ember) ஆகிய மாடல்கள் இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கின்றன. இந்த மாடல்களின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த மாடல்களின் டிஸ்பிளே டிசைனில் மட்டுமே மாற்றங்கள் இருக்கின்றன. அதாவது, போட் அல்டிமா பிரைம் மாடலில் ரவுண்ட் டயல் டிசைனும், போட் அல்டிமா எம்பர் மாடலில் ஸ்குவார் டிசைனும் கிடைக்கிறது. மற்ற பீச்சர்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஆகவே, இரண்டு மாடல்களிலும் ஃபங்ஷ்னல் க்ரவுண் (Functional Crown) கிடைக்கிறது.

போட் அல்டிமா பிரைம் மாடலில் 1.43 (466 × 466 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே (Always-On Display) மாடலாக இருக்கிறது. அதேபோல போட் அல்டிமா எம்பர் மாடலில் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 1.96 இன்ச் (368 × 448 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே வருகிறது.
இந்த டிஸ்பிளேவிலும் ஆல்வேஸ்-ஆன் சப்போர்ட் கிடைக்கிறது. மற்ற பீச்சர்கள் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. ஆகவே, இந்த மாடல்களில் ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) சப்போர்ட் மட்டுமல்லாமல், டயல் பேட் (Dial Pad) மற்றும் கான்டாக்ட்ஸ் (Contacts) சப்போர்ட் கிடைக்கிறது. வாக்கிங், ரன்னிங், ஜாக்கிங், டிரக்கிங் போன்ற 100+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) வருகின்றன.
கிளவுட் பேஸ்டு வாட்ச் பேஸ்கள் (Cloud Based Watch Faces) மற்றும் கஸ்டம் வாட்ச் பேஸ்கள் (Custom Watch Faces) கிடைக்கின்றன. ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor) மற்றும் எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor) கிடைக்கிறது. இதுபோக ஸ்லீப் டிராக்கர் (Sleep Tracker), ஸ்ட்ரெஸ் லெவல் டிராக்கர் (Stress Level Tracker) மற்றும் மென்சுரல் சைக்கிங் டிராக்கர் (Menstrual Cycle Tracker) கிடைக்கிறது.
மேலும், ப்ரீதிங் பிராக்டிஸ் (Breathing Practice) கிடைக்கிறது. இந்த ஹெல்த் டிராக்கர்கள், மானிட்டர்கள் மட்டுமல்லாமல், கோல் டிராக்கிங் (Goal Tracking) சப்போர்ட் கிடைக்கிறது. ஸ்மார்ட் பீச்சர்களை பார்க்கையில், எஸ்எம்எஸ் (SMS) மற்றும் சோஷியல் மீடியா நோட்டிபிகேஷன் (Social Media Notifications) சப்போர்ட் உள்ளது. இந்த மாடல்களில் IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.
மேலும், வழக்கமாகன கேமரா கன்ட்ரோல் (Camera Control), மியூசிக் கன்ட்ரோல் (Music Control) மற்றும் எமர்ஜென்சி எஸ்ஓஎஸ் (Emergency SOS) சப்போர்ட் கிடைக்கிறது. போட் அல்டிமா பிரைம் மாடலில் 15 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். ப்ளூடூத் காலிங் மோடில் 3 நாட்களுக்கு மேல் பேக்கப் எதிர்பார்க்கலாம். அதேபோல எம்பர் மாடலிலும் 15 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கிறது.
ப்ளூடூத் காலிங் மோடில் 3 முதல் 5 நாட்கள் வரையில் பேக்கப் கிடைக்கிறது. இந்த மாடல்களுக்கு 1 வருட வாரண்டி கிடைக்கிறது. அல்டிமா பிரைம் மாடலில் ஓனிக்ஸ் பிளாக் (Onyx Black), சில்வர் மிஸ்ட் (Silver Mist), ஃபாரஸ்ட் கிரீன் (Forest Green), ராயல் பெர்ரி (Royal Berry), ரோஸ் கோல்டு (Rose Gold) மற்றும் ஸ்டீல் பிளாக் (Steel Black) கலர்கள் இருக்கின்றன.
அல்டிமா எம்பர் மாடலில் போல்ட் பிளாக் (Bold Black), சில்வர் மிஸ்ட் (Silver Mist), ராயல் பெர்ரி, ரோஸ் கோல்டு மற்றும் ஸ்டீல் பிளாக் ஆகிய கலர்கள் வருகின்றன. இந்த மாடல்களின் விலை ரூ.1,899ஆக இருக்கிறது. அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் போட் (boAt) தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. பட்ஜெட்டில் பக்கா பீச்சர்களை கொடுக்கின்றன.