ARTICLE AD BOX
BSNL, Jio, Airtel, Vi சிம் இருக்கா? மொபைல் யூசர்களை எச்சரித்த DOT.. உடனே கவனியுங்க.. இல்லாட்டி மாட்டிப்பீங்க..
இந்திய தொலைத்தொடர்பு துறை (The Department of Telecommunications - DOT) இந்தியாவில் உள்ள கோடிக் கணக்கான மொபைல் பயனர்களை எச்சரித்துள்ளது. குறிப்பாக, பிஎஸ்என்எல் (BSNL), ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் விஐ (Vi) என்றழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நெட்வொர்க் சிம் கார்டுகளை பயன்படுத்தும் டெலிகாம் பயனர்களை மோசமான புதிய போலி சிம் கார்டு மோசடியில் (fake SIM card scam) இருந்து தங்களை காத்துக்கொள்ளும்படி DOT எச்சரித்துள்ளது. உங்கள் பெயரில் போலி சிம் கார்டுகள் பயன்பாட்டில் இருக்கிறதா என்பதை ஆன்லைனில் செக் செய்ய அறிவுரைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சைபர் குற்றங்கள் (cybercrimes) நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மோசடி செய்யும் நபர்கள் இப்போது பல புதிய யுக்திகளை கையாண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது மோசமான ஒரு புதிய மோசடியை சைபர் குற்றவாளிகள் (cyber criminals) நூதன முறையில் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இந்த மோசடி உங்களுக்கே தெரியாமல் உங்கள் பெயரில் நடைபெற்றுக்கொண்டிருக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்று DOT எச்சரித்துள்ளது.

BSNL, Jio, Airtel, Vi சிம் இருக்கா? மொபைல் யூசர்களை எச்சரித்த DOT.. உடனே கவனியுங்க மக்களே:
ஒரு தனிநபரின் ஆதார் (Aadhaar) மற்றும் அடையாள ஆவணங்களை (Identity proof documents) அவர்களுக்கே தெரியாமல் பயன்படுத்தி, சில மோசக்காரர்கள் இப்போது போலி சிம் கார்டுகளை (fake SIM cards) உருவாக்கி, அதன் மூலம் மோசடி மற்றும் சைபர் குற்றங்களில் ஈடுபடுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் பெரும் எண்ணிக்கையிலான அப்பாவி மக்களின் அடையாள ஆவணங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக இந்திய சைபர் கிரைம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய தொலைத்தொடர்பு துறை அதன் அதிகாரப்பூர்வ X பக்கத்தில் இது குறித்த விழிப்புணர்வு பதிவை பதிவிட்டுள்ளது. அதில், சைபர் குற்றவாளிகள் உங்கள் ஆவணங்களைப் பயன்படுத்தி மோசடிக்காக போலி சிம் கார்டுகளை உருவாக்கி, அவற்றை பல்வேறு சைபர் மோசடிகளுக்குப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுகிறார்கள். உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, தொலைத்தொடர்புத் துறையால் வழங்கப்பட்ட சஞ்சார் சத்தி போர்ட்டலை (Sanchar Saathi portal) உடனே பார்வையிடவும் என்று உத்தரவிட்டுள்ளது.
உஷார்.. உங்களுக்கே தெரியாமல் உங்கள் பெயரில் போலி சிம் கார்டுகள் மோசடிக்கு பயன்படுத்தப்படுகிறதா?
இந்த தளத்தில், உங்கள் பெயரின் கீழ் உங்களுக்கே தெரியாமல் ஏதேனும் புதிய SIM கார்டுகள் பயன்பாட்டில் உள்ளனவா? என்பதை சரிபார்ப்பது நல்லது என்று DOT தெரிவித்துள்ளது. உங்கள் அடையாளத்துடன் தொடர்புடைய ஏதேனும் அறிமுகமில்லாத எண்களை நீங்கள் கவனித்தால், உடனடியாக சஞ்சார் சதி போர்டல் அல்லது மத்திய அரசால் தொடங்கப்பட்ட செயலி (Sanchar Saathi mobile apps) மூலம் புகாரளித்து அவற்றின் பயன்பாட்டை உடனே துண்டிக்க செய்யவும் என்று வலியுறுத்தியுள்ளது.
இதை கவனிக்காமல் அலட்சியமாக விட்டுவிட்டால், என்றாவது ஒரு நாள் உங்கள் பெயர் ஏதேனும் ஒரு மோசமான மோசடியில் சிக்க வாய்ப்புள்ளது என்று DOT எச்சரித்துள்ளது. இது உங்கள் வாழ்க்கையை பாதிக்கக்கூடும் என்பதால் உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறைகளை பின்பற்றவும் மக்களே.
உங்கள் பெயரில் போலி சிம் கார்டுகள் எதுவும் பயன்பாட்டில் உள்ளனவா என்பதை அறிந்துகொள்ள, இதை பின்பற்றுங்கள்:
- முதலில் சஞ்சார் ஸாத்தி (Sanchar Saathi) என்ற இந்த https://sancharsaathi.gov.in வலைப்பக்கத்திற்கு செல்லவும்.
- அல்லது Sanchar Saathi மொபைல் ஆப்ஸ் பயன்பாட்டையும் கூட பயன்படுத்தலாம்.
- காண்பிக்கப்படும் விருப்பங்களில் Know Mobile Connections in Your Name விருப்பத்தை தேர்வு செய்யவும்.
- TAFCOP என்ற புதிய விண்டோ திறக்கப்படும்.
- இதில் உங்கள் மொபைல் எண் மற்றும் கேப்ட்சா கோட் உள்ளிடவும்.
- உங்கள் போனிற்கு வரும் OTP விபரத்தை உள்ளிட்டு லாகின் செய்யவும்.
- இப்போது உங்கள் பெயரின் கீழ் எத்தனை SIM கார்டுகள் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது காண்பிக்கப்படும்.
- சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளை கண்டால், அந்த SIM நம்பரை கிளிக் செய்து Not Required விருப்பத்தை தேர்வு செய்யவும்.
இந்த செயல்முறையை பின்பற்றுவதன் மூலம் உங்கள் பெயரில், உங்களுக்கே தெரியாமல் இயங்கிக்கொண்டிருக்கும் சிம் கார்டுகளை பயன்பாட்டில் இருந்து தடை செய்ய முடியும். சைபர் குற்றங்கள் தொடர்பாக புகார் அளிக்க 1930 உதவி அழைப்பு எண்ணை பயன்படுத்தலாம்.