ARTICLE AD BOX
Motorola-வின் முரட்டு போன் மீது வெயிட்டு ஆபர்.. இப்போ ரூ.10,000 கம்மி.. கண்ண மூடிக்கிட்டு வாங்க 5 காரணங்கள்!
4 வருட செக்யூரிட்டி அப்டேட்ஸ், 144ஹெர்ட்ஸ் டிஸ்பிளே 12ஜிபி ரேம், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவு உடனான கேமரா செட்டப், 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா, 125W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் டர்போ சார்ஜிங்கிற்கான ஆதரவு உடனான 4,500எம்ஏஎச் பேட்டரி என பல முக்கிய அம்சங்களை கொண்டுள்ள ஒரு முரட்டு மோட்டோரோலா ஸ்மார்ட்போன் மீது வெயிட்டான டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
அதென்ன மாடல்? தற்போது பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில், மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 5ஜி (Motorola Edge 50 Pro 5G) ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது, அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.41,999 க்கு பதிலாக 23% நேரடி தள்ளுபடிக்கு பின் ரூ.31,9899 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது முழுதாக ரூ.10,000 விலை குறைப்பை பெற்றுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 5ஜி-யின் விரிவான அம்சங்கள்: ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) அடிப்படையிலான ஹலோ யுஐ உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனிற்கு 3 முக்கிய ஓஎஸ் அப்டேட்ஸ் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்ஸ் கிடைக்கும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு உடனான 6.7-இன்ச் 1.5K pOLED கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
குவால்காமின் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, இது ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது. அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவுடன் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் + 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் + 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் உள்ளன.
முன்பக்கத்தில், குவாட்-பிக்சல் தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோஃபோகஸ் ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. மேலும் இது தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி68-ரேடிங்கையும் கொண்டுள்ளது. கடைசியாக இது 125W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் டர்போ சார்ஜிங்கிற்கான ஆதரவு உடனான 4,500எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது. 12ஜிபி ரேம் ஆப்ஷன் உடன் 125W சார்ஜர் வரும்; 8ஜிபி ரேம் ஆப்ஷன் உடன் 68W சார்ஜர் வரும்.
மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை நம்பி வாங்க 5 காரணங்கள்: இது "டாப் டக்கர்" என்று கூறுபடியாக மிகவும் அற்புதமான.. கண்களை கவரும் டிசைனை பெற்றுள்ளது. 144ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் உடனான இதன் டிஸ்பிளே வேற லெவல் எக்ஸ் பீரியன்ஸை வழங்குகிறது. இது பலரும் எதிர்பார்க்கும் ஒரு முக்கிய அம்சமான.. நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங் உடன் வருகிறது.
மேலும் ஓஐஎஸ் ஆதரவு உடனான இதன் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் ஆனது இம்ப்ரெஸிவ் ஆன அவுட்புட்களை வழங்குகிறது. பேஸிக் வேரியண்ட் உடன் வரும் 50W மற்றும் ஹை-எண்ட் வேரியண்ட் உடன் 125W ஆகிய இரண்டு பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமுமே மிகவும் வேகமான சார்ஜிங் ஸ்பீடை வழங்குகின்றன.
மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்காமல் தவிர்க்க 2 நியாயமான காரணங்கள்: இதே விலைப்பிரிவின் கீழ் வாங்க கிடைக்கும் மற்ற சில போன்களுடன் ஒப்பிடும் போது இதன் பெர்ஃபார்மென்ஸ் ஒருபடி கீழே உள்ளது. ரியர் கேமரா செட்டப் ஆனது தரமான புகைப்படங்களை வழங்கினாலும் கூட, அதே அளவிலான புகைப்படங்களை இதன் செல்பீ கேமராவால் எதிர்பார்க்க கூடாது.