ARTICLE AD BOX
ராகி அதிக அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதில் கால்சியம் அதிகமாக உள்ளது, இது ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களை பராமரிக்க முக்கியமானது. ராகியில் அரிசி அல்லது கோதுமையை விட 10 மடங்கு கால்சியம் உள்ளது.
இது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி மற்றும் இரத்த சோகை தடுப்புக்கு உதவும். அவ்வளவு சத்துக்கள் நிறைந்த ராகி, ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க உதவும். நீரிழிவு நோய், புற்றுநோய் வராமல், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், எலும்பை உறுதியாக்கவும் உதவும்.
அப்படிப்பட்ட ராகியை வைத்து ராகி பன் தோசை செய்வது பற்றி குறிஞ்சி டாட் காம் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
ராகி மாவு
ரவை
உப்பு
தயிர்
எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
சின்ன வெங்காயம்
கேரட்
கொத்தமல்லி தழை
செய்முறை
ஒரு பவுலில் ஒரு கப் ராகி மாப்பு, ரவை, தயிர் இவை அனைத்தையும் கலந்து ஒரு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து வைக்கவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, உளுந்து, சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கி அதில் துருவிய கேரட், கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கவும்.
10 சாப்பிட்டாலும் பத்தாது பஞ்சு போல சாஃப்டான ராகி பன் தோசை.
பச்சை வாசம் நீங்கியதும் அதை ஆற வைக்கவும். இப்பொது கரைத்து வைத்துள்ள மாவை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். இதனை சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து அதில் இந்த கேரட் வதக்கல் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
அடுத்ததாக எப்போதும் போல ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி ராகி மாவு போட்டு இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்தால் சுவையான ராகி பன் தோசை ரெடியாகிவிடும்.