ARTICLE AD BOX

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் மோதி வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி தொடக்கத்தில் இருந்தே தடுமாறி விளையாடி வந்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய தன்சித் ஹசன் 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பிறகு வந்த மெஹிதி ஹசன் மிராஸ் 13, தவ்ஹித் ஹிரிடோய் 7, முஷ்பிகுர் ரஹிம் 2, மஹ்முதுல்லா 4 ரன்கள் எடுத்து தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்தனர்.
இருப்பினும் கடைசி வரை களத்தில் நின்ற பங்களாதேஷ் அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ நிதானமாக விளையாடி கொண்டிருந்தார். இருப்பினும் தொடர்ச்சியாக விக்கெட் இழந்த காரணத்தால் ஒரு நல்ல ஸ்கோரை இலக்காக நிர்ணயம் செய்ய பங்களாதேஷ் அணி தவறியது. ஒரு கட்டத்தில் நிதானமாக விளையாடி வந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ 77 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
இவர் ஆட்டமிழந்து வெளியேறிய போது 37.2 ஓவர்களில் பங்களாதேஷ் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதில் இருந்து கொஞ்சம் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்க்கும் என எதிர்பார்த்த நிலையில் பங்களாதேஷ் வீரர்கள் நிதானமாக விளையாடி கொண்டு இருந்தார்கள். துவண்டு போன பங்களாதேஷ் அணியை தூக்கி நிறுத்தியது என்றால் ஜாகிர் அலி என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், அவருடைய பேட்டிங் தான் அணிக்கு ஒரு பக்க பலமாகவும் கடைசி நேரத்தில் அமைந்தது. தடுமாறிய சமயத்தில் 45 ரன்கள் எடுத்து அணிக்கு ரன்களை சேர்த்து கொடுத்தார்.
இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு பங்களாதேஷ் அணி 236 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணியில் பந்துவீச்சை பொறுத்தவரையில் மைக்கேல் பிரேஸ்வெல் தான் கலக்கினார் என்று சொல்லலாம். ஏனென்றால், இவருடைய அசத்தலான பந்துவீச்சில் தான் 4 விக்கெட்கள் விழுந்தது. அவரை போல, வில்லியம் ஓரூர்க் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். பங்களாதேஷ் அணி 236 ரன்கள் எடுத்து 237 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்துள்ள நிலையில், அடுத்ததாக நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது.