ARTICLE AD BOX
ஞாயிறுக்கிழமை துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்தது. அதே நேரத்தில் 2 தோல்விகளைச் சந்தித்த பாகிஸ்தான் அணி கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது.
போட்டியின்போது பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் 'தஸ்பீஹ்' என்ற மாலையை கையில் வைத்துக்கொண்டு அதிர்ஷ்ட தங்கள் பக்கம் மாறுவதற்காகப் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. ரிஸ்வானின் செயலுக்காக அவர் கேலி செய்யப்பட்டார். ரிஸ்வானின் செயலைக் கண்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அவரை கிண்டல் செய்தார்.
இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவும் மகாமிர்துஞ்சய் மந்திரத்தை உச்சரிக்கப் போகிறார் என்று ரெய்னா வேடிக்கையாகக் கூறினார். ரிஸ்வான் போட்டியின்போது பிரார்த்தனை செய்யும் வீடியோ கிளிப் இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Pakistanis are part time cricketers full time Maulanas😹😹😹😹#INDvsPAK pic.twitter.com/GJg4tvmw4R
— God (@Indic_God) February 23, 2025நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிராக அடுத்தடுத்த இரண்டு தோல்விகளைப் பெற்ற பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அந்த அணி நாக் அவுட் நிலைக்கு தகுதி பெற ஏதாவது ஒரு அதிசயம் நடந்தால்தான் உண்டு. ஆனால் இந்திய அணி கிட்டத்தட்ட அரையிறுதி இடத்தைப் பிடித்துவிட்டது.
போட்டிக்குப் பின்பு பேசிய ரிஸ்வான், "இந்த மைதானத்தில் 280 ரன்கள் ஒரு நல்ல ஸ்கோர் என்று நாங்கள் நினைத்தோம். மிடில் ஓவர்களில், அவர்களின் பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசி எங்கள் விக்கெட்டுகளை வீழ்த்தினர். நானும் சவுத் ஷகீலும், ஆட்டத்தை நிதானமாக எடுத்துச் செல்ல விரும்பினோம். அதற்காக நேரம் எடுத்துக்கொண்டோம். அதன் பிறகு, தவறான, மோசமான ஷாட் தேர்வு காரணமாக விக்கெட்டுகளை இழந்தோம். அவர்கள் எங்களை அழுத்தத்தில் ஆழ்த்தினர். அதனால்தான் 250 ரன்களுக்குள் ஸ்கோரை கட்டுப்படுத்தினர்" என்று கூறினார்.
பாகிஸ்தான் அணி இன்னும் வங்கதேசத்துடன் ஒரு போட்டியில் விளையாட உள்ளது. அதே நேரத்தில் இந்தியா தனது கடைசி போட்டியில் நியூசிலாந்துடன் விளையாடும். பாகிஸ்தான் தகுதி பெற, மற்ற போட்டிகளின் முடிவுகள் அவர்களுக்குச் சாதகமாக இருக்க வேண்டும். மேலும், அவர்கள் வங்கதேச அணியை மிகப்பெரிய வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும்.