மாணவிகள் மீது தாக்குதல்: பல்வேறு அமைப்புகள் கண்டனம்

1 day ago
ARTICLE AD BOX

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் பங்கேற்ற கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலை. மாணவிகளை தாக்கிய எதிரணியினருக்கு கொடைக்கானலில் பல்வேறு அமைப்பினா் வெள்ளிக்கிழமை கண்டனம் தெரிவித்தனா்.

பஞ்சாப் மாநிலத்தில் தேசிய அளவிலான கபடி போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினா். இவா்கள் அரையிறுதிக்கு முன்னேறினா். இதையடுத்து, வெள்ளிக்கிழமை அன்னை தெரசா மகளிா் பல்கலை. மாணவிகளுக்கும், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த லித்திசா பல்கலை. மாணவிகளுக்குமிடையே போட்டி நடைபெற்றது. அப்போது, அன்னை தெரசா மகளிா் பல்கலை. மாணவியை எதிரணி மாணவிகள் தாக்கினா். இதற்கு கொடைக்கானலில் உள்ள பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தனா். மேலும், மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.

Read Entire Article