சென்னையில் 3 சிக்ஸ் அடிக்காம தோனியை ஃபாலோ பண்ண திலக்.. சூப்பர்ஸ்டாரா வருவாரு.. ஆகாஷ் சோப்ரா

21 hours ago
ARTICLE AD BOX

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. அதனால் 2 – 0* (5) என்ற கணக்கில் இந்தியா இந்தத் தொடரில் முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. முன்னதாக சென்னையில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்த உதவியுடன் 166 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

இந்திய அணிக்கு அதிகபட்சமாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். பின்னர் சேசிங் செய்த இந்திய அணிக்கு திலக் வர்மா அதிரடியாக விளையாட துவங்கினார். ஆனால் சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, கேப்டன் சூரியகுமார், ஜுரேல், ஹர்டிக் பாண்டியா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினர்.

திலக் அசத்தல்:

அதனால் ஒரு கட்டத்திற்கு பின் நிதானமாக விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட திலக் வர்மா 4 பவுண்டரி 5 சிக்சருடன் 72* (55) ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்தார். அவருக்கு வாஷிங்டன் சுந்தர் 26, பிஸ்னோய் 9* ரன்கள் அடித்து கை கொடுத்தார்கள். அதனால் 19.2 ஓவரில் இந்தியா போராடி வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இந்தப் போட்டியில் ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடிய திலக் வர்மா தொடர்ந்து 3 சிக்ஸர்கள் அடித்திருக்க முடியும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ஆனால் அப்படி அவசரப்பட்டு அடித்து இழக்க விரும்பாத அவர் தோனி போல விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுத்ததாக ஆகாஷ் சோப்ரா பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

தோனியின் வழியில்:

“திலக் வர்மா சூப்பர் ஸ்டார். சில நேரங்களில் வீரர்களை நாம் முன்கூட்டியே அவ்வாறு அழைப்போம். சிறந்த வீரர் அல்லது லெஜெண்ட் என்று ஆரம்ப நாட்களிலேயே அழைப்போம். அப்படி திலக் வர்மா சூப்பர்ஸ்டார் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் அவர் சூப்பர் ஸ்டாராகும் வழியில் இருக்கிறார். கடைசி வரை விளையாட தன்னுடைய விக்கெட்டை தூக்கி எறியவில்லை”

இதையும் படிங்க: நாங்களும் இதை செய்வோம்.. இங்கிலாந்தின் திட்டம் எனக்கு தெரிஞ்சுடுச்சு.. திலக் பற்றியும் பிஸ்னோய் பேட்டி

“8 விக்கெட்டை இழந்த இந்தியாவுக்கு 18 ரன்கள் தேவைப்பட்ட போது ஏற்கனவே 5 சிக்ஸர்கள் அடித்திருந்த அவர் இன்னும் 3 சிக்ஸர்கள் அடிக்க முயற்சி செய்திருக்கலாம். ஆனால் அவர் போட்டியின் ஆழத்தை நோக்கி சென்றார். அது சென்னையில் நடைபெற்றது. அது தோனியின் சொந்த வீடு. அதனால் அவருடைய வழியில் இந்தப் பயணம் சேசிங் செய்வதில் ஆழமாக சென்றார்” என்று கூறினார்.

The post சென்னையில் 3 சிக்ஸ் அடிக்காம தோனியை ஃபாலோ பண்ண திலக்.. சூப்பர்ஸ்டாரா வருவாரு.. ஆகாஷ் சோப்ரா appeared first on Cric Tamil.

Read Entire Article