உலகிலேயே எந்த பவுலரும் செய்யாத சாதனை.. இலங்கை பவுலரின் பிரம்மாண்ட 300 விக்கெட் ரெக்கார்டு

13 hours ago
ARTICLE AD BOX

உலகிலேயே எந்த பவுலரும் செய்யாத சாதனை.. இலங்கை பவுலரின் பிரம்மாண்ட 300 விக்கெட் ரெக்கார்டு

Published: Monday, January 27, 2025, 9:21 [IST]
oi-Aravinthan

அபுதாபி: உலகிலேயே எந்த பந்துவீச்சாளரும் செய்யாத அதிவேக டி20 விக்கெட் சாதனையை செய்து இருக்கிறார். இலங்கை அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்கா. அவர் இலங்கை அணிக்காக டி20 போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி அதிக விக்கெட்களை வீழ்த்தி வருகிறார்.

அதே சமயம் உலகம் முழுவதும் நடைபெறும் டி20 லீக் தொடர்களிலும் வனிந்து ஹசரங்கா பங்கேற்று வருகிறார். அவரை இதுவரை 209 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார் அதில் ஒட்டுமொத்தமாக 301 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்து இருக்கிறார். தற்போது அவர் இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரில் விளையாடி வருகிறார்.

ILT20 Wanindu Hasaranga becomes fastest bowler to sclap 300 T20 wickets

அந்தத் தொடரில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்காக விளையாடி வரும் வனிந்து ஹசரங்கா ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மூன்று விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அதன் மூலம் 209 டி20 போட்டிகளில் விளையாடி 300 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்து இருக்கிறார்.

வனிந்து ஹசரங்கா ஒட்டுமொத்தமாக 201 டி20 இன்னிங்ஸ்களில் 301 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். மூன்று முறை ஐந்து விக்கெட் ஹால் மற்றும் 9 முறை நான்கு விக்கெட் ஹால் சாதனைகளையும் செய்து இருக்கிறார். மேலும், ஆல் ரவுண்டராகவும் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் இதுவரை 2335 ரன்களை 145.21 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து இருக்கிறார். ஒன்பது அரை சதங்களை அடித்து இருக்கிறார்.

இதற்கு முன் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஆண்ட்ரூ டை 211 போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ஆப்கானிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரஷித் கான் 213 போட்டிகளில் 300 விக்கெட்டுகள் என்ற மைல் கல்லை கடந்து இருந்தார். அவர்கள் இருவரையும் முந்தி இருக்கும் வனிந்து ஹசரங்கா உலகிலேயே விரைவாக 300 டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பிரம்மாண்ட சாதனையை செய்து இருக்கிறார்.

மாபெரும் உலக சாதனை.. எந்த வீரரும் தொடாத உச்சம்.. திலக் வர்மா படைத்த பிரம்மாண்ட ரெக்கார்டுமாபெரும் உலக சாதனை.. எந்த வீரரும் தொடாத உச்சம்.. திலக் வர்மா படைத்த பிரம்மாண்ட ரெக்கார்டு

சர்வதேச டி20 போட்டிகளில் 131 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார் வனிந்து ஹசரங்கா. ஐபிஎல் தொடரில் அவர் 26 போட்டிகளில் விளையாடி 35 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Monday, January 27, 2025, 9:21 [IST]
Other articles published on Jan 27, 2025
English summary
ILT20: Wanindu Hasaranga becomes fastest bowler to sclap 300 T20 wickets, beat Andrew Tye and Rashid Khan records
Read Entire Article