அகர்கர் பதவிக்கு மட்டும் வரவே மாட்டேன்.. அதுக்கான காரணம் இதுதான் – அஸ்வின் பேச்சு

21 hours ago
ARTICLE AD BOX

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தான் எப்பொழுதும் இந்திய தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு வர விரும்பவில்லை என்று அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.

நேற்று ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருதை அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பல பொறுப்புகளுக்கு எதிர்காலத்தில் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படியான நிலையில் அஸ்வின் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் எதிர்காலம்

கிரிக்கெட்டில் ஏற்படும் மாற்றங்கள், மேலும் அதை வளர்ச்சி கட்டத்தில் எடுத்துச் செல்வதற்கான தொலைநோக்கு சிந்தனை என ஒரு கிரிக்கெட் வீரராக மட்டும் இல்லாமல், கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் தொலைநோக்கு பார்வை கொண்டவராகவும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருந்து வருகிறார்.

இதன் காரணமாகவே அவர் இந்திய கிரிக்கெட் வாரியம் அல்லது ஐசிசி என பெரிய பொறுப்புகளுக்கு எதிர்காலத்தில் வருவார் என பல முன்னாள் வீரர்கள் கூறி வருகிறார்கள். இருந்தபோதிலும் கூட ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியத் தேர்வுக் குழுவின் தலைவர் பதவிக்கு மட்டும் தான் வரமாட்டேன் என்று கூறியிருக்கிறார். அதற்கான காரணங்கள் குறித்தும் அவர் விளக்கமாக பேசியிருக்கிறார்.

எனக்கு இந்த பதவி வேண்டாம்

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும் பொழுது “நான் இந்திய தேர்வுக் குழுவின் தலைவராகவோ அல்லது அணியின் மேனேஜராகவோ இருக்க எப்பொழுதும் விரும்பவில்லை. அதாவது நான் இந்திய கிரிக்கெட்டில் முடிவெடுக்கும் இடத்தில் இருக்க நினைக்கவில்லை”

“வரவிருக்கும் ஐபிஎல் சீசனில் கில் மற்றும் ருதுராஜ் இருவருமே சிறப்பாக செயல்படும் பொழுது, அது தேர்வுக்குழுவுக்கு பெரிய தலைவலியாக இருக்கும். ஏனென்றால் இருவரில் ஒருவரை மட்டுமே தேர்வு செய்ய முடியும். மேலும் இந்த அளவிற்கு திறமையான வீரர்கள் கொண்ட குழுவை நாம் வைத்திருப்பது நம்முடைய பாக்கியம்”

இதையும் படிங்க : நான் டெஸ்ட் பேட்டிங்கில் தப்பு பண்ணிட்டேன்.. இந்த விஷயங்களை தவற விட்டுட்டேன் – சுப்மன் கில் ஓபன் பேட்டி

“நாம் முன்னோக்கி செல்லும் பொழுது வீரர்களை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், அழுத்தத்தில் எந்த வீரர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதை பார்த்து, அப்படி அழுத்தத்தில் சிறப்பாக செயல்பட கூடியவர்களுக்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஏனென்றால் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான முறையில் பந்தை டைமிங் செய்யக்கூடிய பலவீரர்கள் இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

The post அகர்கர் பதவிக்கு மட்டும் வரவே மாட்டேன்.. அதுக்கான காரணம் இதுதான் – அஸ்வின் பேச்சு appeared first on SwagsportsTamil.

Read Entire Article