ARTICLE AD BOX
பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட மாணவிகள் 8 பேர் மருத்துவமனையில் அனுமதியாகினர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூரில், அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 700 க்கும் அதிகமான மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இதையும் படிங்க: டூவீலரில் அசால்ட்டா ரைடு போறிங்களா? உசுரே போச்சு.. தனியார் பேருந்து மீது மோதி இளைஞர்கள் 2 பேர் பலி.!
இதனிடையே, நேற்று மதியம் சுமார் 01:00 மணியளவில், சத்துணவில் சாப்பிடும் மாணவிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. அப்போது, முதலில் உணவு வாங்கிய 7 மாணவிகள் சாப்பிட்டுள்ளார்.
7 மாணவிகள் பாதிப்பு
அப்போது, பதினோராம் வகுப்பு பயின்ற மாணவி கனிஸ்கா என்பவரின் உணவில் பல்லி தலை தென்பட்டுள்ளது. இதனைக்கண்ட அவர் வாந்தி எடுத்துள்ளார். பின் அடுத்தடுத்து என 7 மாணவிகள் வாந்தி எடுத்து மயங்கியுள்ளனர்.
மேலும், பள்ளியில் இரவு நேர காவலராக வேலை பார்க்கும் மலர்விழி (வயது 45) என்பவரும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். இதனால் அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர்.
மாணவிகள் சாப்பிட்ட உணவில் பல்லி விழுந்ததால், உடல்நலக்குறைவை அவர்கள் எதிர்கொண்டது தெரியவந்தது. இது தொடர்பாக அரூர் காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சொத்து தகராறில் பயங்கரம்.. சித்தி அடித்துக்கொலை.! பாலக்கோட்டில் பகீர் சம்பவம்.!