ARTICLE AD BOX
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மூன்றாவது அதிவேக அரைசதம்; இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா சாதனை
செய்தி முன்னோட்டம்
இந்தியா vs இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) நடைபெற்றது.
இதில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் சதமடித்தார்.
இதன் மூலம் ஐசிசியின் முழு உறுப்பினர் நாடுகளில் மூன்றாவது அதிவேக சதமடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
மேலும், இந்திய அளவில் ரோஹித் ஷர்மாவுக்கு அடுத்து இரண்டாவது அதிவேக சதமடித்த வீரராகவும் மாறியுள்ளார்.
இதற்கிடையே, 17 பந்துகளில் அரைசதம் எட்டி,யுவராஜ் சிங்கிற்கு அடுத்து அதிவேகமாக அரைசதம் எட்டிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
சஞ்சு சாம்சன்
முதல் பந்தில் சிக்சர் அடித்து சஞ்சு சாம்சன் சாதனை
இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் மற்றிரு தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் முதல் ஓவரிலேயே அதிரடியாக விளையாடி இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்தார்.
இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் முதல் ஓவரை வீசிய நிலையில், முதல் பந்து மற்றும் ஐந்தாவது பந்தில் இரண்டு சிக்சர்கள் அடித்தார்.
இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் பந்திலேயே சிக்சர் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார்.
முன்னதாக, ரோஹித் ஷர்மா 2021லும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2024லும் இந்த சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
எனினும் 16 ரன்கள் எடுத்திருந்த போது சஞ்சு சாம்சன் அவுட்டாகி வெளியேறினார்.
பவர்பிளே
பவர்பிளேயில் அதிகபட்ச ரன்கள்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் அதிகபட்ச பவர்பிளே ஸ்கோரும் இந்த போட்டியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, 2021இல் ஸ்காட்லாந்திற்கு எதிராக துபாயில் நடந்த போட்டியில் 82/2 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அதை முறியடித்து இந்த போட்டியில் பவர்பிளே முடிவில் 95/1 ரன்கள் எடுக்கப்பட்டது.
2024இல் ஹைதராபாத்தில் வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிராகவும் இந்திய அணி 82/1 எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.