ARTICLE AD BOX

ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் புட்டபர்த்தி நகரில் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வெங்கடபதி என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் ஹோலி கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது மாணவிகள் ஹோலி கொண்டத்தில் சந்தோசமாக இருந்தனர். இந்த நிலையில் தலைமை ஆசிரியரான வெங்கடபதி ஹோலி என்ற பெயரில் அத்துமீறி நடந்து கொண்டார்.
இதனை அக்கம் பக்கத்து வீட்டிலுள்ள பெண்கள் செல்போனில் வீடியோ எடுத்து மாணவிகளின் பெற்றோருக்கு அனுப்பி வைத்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று வெங்கடபதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தலைமை ஆசிரியரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்குப்பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.