ARTICLE AD BOX

தமிழ்நாட்டில் முதல் முறையாக பெண் தலைமையில் இயங்கும் வணிகவியல் கல்வி சார்ந்த தொழில்நுட்ப தளமான Edu Home Connect.com தளத்தின் லோகோவை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தளம், விர்ச்சுவல் ஸ்கில் ரைசர் எஜுடெக் பிரைவேட் லிமிடெட் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. CA, CMA, ACCA, CS போன்ற வணிகவியல் தொழில்முறை படிப்புகளை அனைத்து மாணவரும் எளிதாகக் கற்றுக் கொள்ளும் வகையில் குறைந்த கட்டணத்தில் வழங்கும் நோக்குடன் இயங்குகிறது. இதில் வீடியோ வகுப்புகள், நேரடி பயிற்சி, தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதல் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. மேலும், தேவையான புத்தகங்கள் மற்றும் பாடப் பொருள்களும் இலவசமாக வழங்கப்படுகிறது.
விர்ச்சுவல் ஸ்கில் ரைசர் எஜுடெக் பிரைவேட் லிமிடெட் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் முதன்மை இயக்குநராக CMA பாத்திமா டெல்ஃபா செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த 7 ஆண்டுகளாக வணிகவியல் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். Edu Home Connect தளம் Edu Campus Connect மற்றும் Edu Skill Connect என மூன்று பிரிவுகளில் மாணவர் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் நேரடியாகவும், தொழில்துறையுடன் இணைந்து வேலைவாய்ப்பை நோக்கி செயல்படுகிறது. பாத்திமா டெல்ஃபாவின் கணவர் முகமது அஸ்தஃப், Edu Home Connect.com நிறுவனத்தின் செயலாளர் மற்றும் நிதி ஆலோசகராக இருக்கிறார். இவரது எழுத்துப்பணி “Cost and Management” எனும் நூலை முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி. ரங்கராஜன் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.