மலிவு விலை கார்கள் வரப்போகுது இந்தியாவில்.. டெஸ்லா கொடுக்கும் சர்ப்ரைஸ்!

11 hours ago
ARTICLE AD BOX

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் மலிவு விலை கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மாடல் ஒய் காரின் குறைந்த விலை பதிப்பு முதலில் அறிமுகமாகலாம். இந்த கார்கள், ஷாங்காயில் உற்பத்தி செய்யப்பட்டு, ஆசிய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி டெஸ்லாவின் உலகளாவிய விற்பனையை அதிகரிக்கும் நோக்கம் கொண்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்றிருந்தபோது டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து பேசினார். அப்போது டிரம்ப் அரசாங்கத்தில் உள்ள ஈலோன் மஸ்க்கையும் சந்தித்தார். இதை தொடர்ந்து டெஸ்லா இந்தியாவில் நுழைய இருப்பதாக கூறியது. தற்போது டெஸ்லா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெஸ்லா மிக குறைந்த விலையில் கார்களை வெளியிட உள்ளது. டெஸ்லா கார்களுக்கு உலகம் முழுவதும் அதிக வரவேற்பு இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளது. 

Tesla

அமெரிக்காவின் ஆரம்ப நிலை டெஸ்லா கார் ஒய் மாடல் மற்ற நாடுகளில் இன்னும் குறைந்த விலையில் வெளியிடப்பட உள்ளது. இந்த மலிவு விலை கார் மூலம் இந்தியாவுக்குள் நுழைய வாய்ப்புள்ளது. தற்போது டெஸ்லாவின் மலிவு விலை கார்கள் சீனாவில் உள்ள ஷாங்காயில் உற்பத்தி செய்யப்படுகிறது.

Tesla Car

டெஸ்லா நிறுவனம் ஷாங்காயில் உற்பத்தி செய்யப்படும் குறைந்த விலை டெஸ்லா கார்களை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஆசிய நாடுகளில் சந்தையை ஆக்கிரமிக்க டெஸ்லா பெரிய திட்டம் தீட்டி வருகிறது. ஆசிய சந்தையில் ஆதிக்கம் செலுத்தினால் விற்பனை கணிசமாக அதிகரிக்கும் என்பதை மஸ்க் உணர்ந்துள்ளார்.

Tesla India Entry

தற்போது டெஸ்லா காரின் ஆரம்ப விலை 35,000 டாலர்கள். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 30 லட்சம் ரூபாய். ஷாங்காயில் தயாரிக்கப்படும் டெஸ்லா ஒய் மாடல் காரின் விலை இன்னும் வெளியிடப்படவில்லை. வட்டாரங்களின் படி இந்த கார்களின் விலை சுமார் 20 லட்சம் ரூபாயாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Tesla Cars In India

டெஸ்லா நிறுவனம் சமீபத்தில் ஒய் மாடல் கார்களை அதிக அம்சங்களுடன் மறுவடிவமைப்பு செய்துள்ளது. டெஸ்லா கார்களில் மாடல் 3 மற்றும் மாடல் ஒய் கார்கள் அதிகம் விற்பனையாகின்றன. முக்கியமாக இதன் விலை. மேலும் டெஸ்லா காரின் தரம் மற்றும் செயல்திறன் குறித்து பெரும்பாலான மக்கள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

ரூ.49,999 இருந்தால் போதும்.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை அதிரடி குறைப்பு..

Read Entire Article