மலர்கள் மூலம் உங்கள் மனநிலையை மேம்படுத்த முடியும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு..!!

3 days ago
ARTICLE AD BOX

மலர்கள் நம் மனநிலையை மேம்படுத்த உதவும் சில மலர்களை காணும் பொழுதே நம் மனதில் மகிழ்ச்சி உண்டாகும் இந்த வகையில் நம் மனநிலையை மேம்படுத்த உள்ள மலர்களை பற்றி காண்போம்..

சூரியகாந்தி பூ : சூரியகாந்தி பூவில் மஞ்சள் நிறம் மகிழ்ச்சியையும் நேர்மையான எண்ணங்களையும் தோற்றுவிக்கிறது இது நம் மனநிலையை பெருமளவில் மேம்படுத்துகிறது பூக்களின் துடிப்பான வண்ணங்கள் நேர்மறை உணர்வை தூண்டும் தன்மை கொண்டவை..

ரோஜா : ரோஜாப்பூ காதல் வருகை தூண்டுவதுடன் அன்பையும் பெருக்கும் அன்பின் அடையாளமாக காணப்படும் சிவப்பு ரோஜாக்கள் காதல் மற்றும் ஆர்வத்தை தூண்டும் தன்மை கொண்டவை ரோஜா பூவை பார்த்தாலே மனப்பதட்டம் அகன்று மகிழ்ச்சி ஏற்படும். பூக்களை முகர்ந்து பார்ப்பது மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைப்பதுடன் மனசோர்வையும் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது..

பீச் மலர் : நீண்ட ஆயுளையும் நல்ல மனநிலையையும் குறிக்கிறது மலர்களின் குணப்படுத்தும் பண்புகளை பயன்படுத்தி மலர் சிகிச்சை அளிக்கப்படுகிறது..

லில்லி : பீஸ் லில்லி எனப்படும் இவை நம் வீடுகளில் வைத்திருக்க வேண்டிய மிகவும் பயனுள்ள தாவரங்களில் ஒன்றாகும் அழகான தோற்றம் கொண்ட பூக்களில் இருந்து வரும் மயக்கும் நறுமணம் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க உதவுகிறது மன சோர்வையும் குறைத்து மகிழ்ச்சியை உண்டு பண்ணுகிறது..

மனோரஞ்சித பூக்கள் : அதிக நறுமணத்தைக் கொண்ட மனோரஞ்சித பூக்கள் காற்றில் அதன் இதமான நறுமணத்தை பரவ விடுவதால் நரம்புகளை அமைதிப்படுத்தி பதட்டத்தினை குறைக்க உதவுகிறது நாடித்துடிப்பு மற்றும் சுவாசத்தை குறைக்கும் என்பதால் மன அழுத்தத்தை குறைத்து மனதை லேசாக மாற்றுகிறது..

லிசியான்தஸ் : இந்த அழகிய பூக்கள் மக்களின் படைப்பாற்றலை வெளி உணர்வதற்கு சுதந்திர சிந்தனையை ஊக்குவிப்பதற்கு பெயர் பெற்றது..

மல்லிகை : மல்லிகையின் நறுமணமும் வெள்ளை நிறமும் நம் மனதை அமைதிப்படுத்துகிறது பதட்டத்தை குறைக்கிறது இதனால் தான் இது வாசனை திரவியங்கள் மூலிகை தேநீர் போன்றவற்றிலும் பாரம்பரிய ஹோமியோபதி வைத்தியங்களிலும் பயன்படுத்தப்படுகிறது மல்லிகை மலர்கள் அமைதியான தூக்கத்தை தரக்கூடியது..

டூலிப் மலர்கள் : பலவிதமான வண்ணங்களில் கண்ணை கவர்வதுடன் மகிழ்ச்சி அன்பு காதல் போன்ற பல உணர்வுகளையும் நமக்கு ஏற்படுகிறது..

லாவண்டர் பூக்கள் : லாவண்டர் பூக்களின் இனிமையான மணம் நம் மன அழுத்தத்தை பெரிதும் குறைக்க உதவுகிறது பூக்கள் அழகாக இருப்பதுடன் மகிழ்ச்சியான உணர்வுகளையும் தூண்டும் சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கும்..!!

Read Entire Article