ARTICLE AD BOX
உடலுக்கு ஆரோக்கியமான கொள்ளு இட்லி செய்வது எப்படி..!! முழுமையான விளக்கம் உள்ளே..!!
கொள்ளு இட்லி செய்ய தேவையான பொருட்கள்:
கொள்ளு ஒரு கப்
இட்லி அரிசி 3 கப்
வெந்தயம் 3 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கொள்ளு மற்றும் இட்லி அரிசியை சுமார் ஐந்து லிருந்து 6 மணி நேரம் தனித்தனியாக கழுவி ஊற வைக்க வேண்டும். இதனுடன் மூன்று டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஊற வைப்பது நல்லது. பின்பு கொள்ளுவை தண்ணீரிலிருந்து வடிகட்டி மென்மையாக அரைத்து எடுக்க வேண்டும். இதற்குப் பின்பு அரிசியையும் வடிகட்டி மென்மையாக அரைத்து எடுக்க வேண்டும் இந்த அரசி கலவையில் அந்த கொள்ளு கலவையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கைகளை பயன்படுத்தி நன்கு கலந்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். பின்பு மாவு எடுத்து இட்லி தட்டில் ஊற்றி இட்லி பத்து நிமிடங்கள் கழித்து எடுத்தால் ஆரோக்கியமான கொள்ளு இட்லி தயார்.