ARTICLE AD BOX
மலச் சிக்கல் பெரும் சிக்கல்...ஈஸியா சரி செய்ய இதோ வழி இருக்கு
வயிற்று கழிவுகள் சரியாக வெளியேறாமல் இருப்பதால் மலம் வெளியேற்றுவதில் கஷ்டம் ஏற்படலாம். இதனை மலச்சிக்கல் (Constipation) என்கிறோம். இது தினசரி வாழ்க்கையை பாதிக்கும். நீண்ட காலம் இதுவே நீடித்தால் பைல்ஸ் மற்றும் செரிமான கோளாறுகள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க நார்சத்து (Fibre) நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம். நார்சத்து அதிகமான உணவுகள் செரிமானத்தை தூண்டி, மலச்சிக்கலைத் தீர்க்க உதவும்.
மலச்சிக்கலை போக்கும் உணவுகள் :
1. பழங்கள் :
பழங்களில் அதிக அளவில் நார்சத்து, நீர்சத்து மற்றும் ஜீரண சக்தியை ஊக்குவிக்கும் நியூட்ரியன்ஸ் உள்ளன. ஆப்பிள் – தோலுடன் சாப்பிட்டால் நிறைய நார்சத்து கிடைக்கும். மாதுளை – குடல் இயக்கத்தை தூண்டும். வாழைப்பழம் – மலச்சிக்கலுக்கு மிகச் சிறந்த இயற்கை மருந்தாகும். பேரிச்சம் பழம் – மிகச்சிறந்த நார்சத்து நிறைந்த ட்ரை ஃப்ரூட். கொய்யா பழம் – இரும்புசத்து மற்றும் நார்சத்து மிகுந்தது. தினமும் 2-3 பழங்களை உணவில் சேர்த்தால், செரிமானம் நன்றாக இருக்கும்.
2. காய்கறிகள் :
காய்கறிகளில் நார்சத்து அதிகம் இருப்பதோடு, மலச்சிக்கலைத் தடுக்க மிகவும் பயனுள்ளவை. பீட்ரூட் – ரத்த ஓட்டத்தையும் செரிமானத்தையும் அதிகப்படுத்தும். பச்சைப்பயறு – நார்ச்சத்து நிறைந்த நியூட்ரியன் பவர் ஹவுஸ் ஆகும். கேரட் – குடல் இயக்கத்தை தூண்டி மலச்சிக்கலை குறைக்கும். புரோக்கோலி – சத்துக்கள் அதிகம் நிறைந்தது. பாகற்காய் – மலச்சிக்கலுக்கு நேரடி மருந்தாகும். வாரத்திற்கு 3-4 முறை சமைத்தோ, சூப்பாகவோ காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
3. தானியங்கள் :
தானியங்களில் இருக்கும் நார்சத்து, குடல் இயக்கத்தை அதிகரித்து மலச்சிக்கலை நீக்க உதவும். சப்பாத்தி – சாதத்திற்கு மாற்றாக சாப்பிடலாம். ஓட்ஸ் – செரிமானத்திற்கு சிறந்தது. கம்பு, ராகி – நார்ச்சத்து மிகுந்தது. முளைகட்டிய தானியங்கள் – நீர்ச்சத்து மற்றும் நார் அதிகம் உள்ளன. கேழ்வரகு கூழ் – குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சிறந்தது. தானியங்களை தினசரி உணவில் சேர்த்தால், குடல் ஆரோக்கியமாக இருக்கும்.
4. பருப்பு, கொண்டைக்கடலை :
பருப்பு மற்றும் நட்ஸ்களில் நார்சத்து, புரதச்சத்து, மற்றும் உடலுக்கு தேவையான சத்துக்கள் உள்ளன. கொண்டைக்கடலை – மலச்சிக்கலை குறைக்கும். பச்சை பயறு – குடல் இயக்கத்தை தூண்டும். கொத்தவரங்காய் – செரிமானத்திற்கு சிறந்தது. பட்டாணி, கொள்ளு – குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். பருப்பு வகைகளை தினமும் உணவில் சேர்ப்பது, குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
5. சத்து நிறைந்த பானங்கள் :
நீரின்றி நார்சத்து உணவுகளை எடுத்தால், மலச்சிக்கல் அதிகரிக்கும். ஆகவே, நீர்சத்து அதிகமாக உள்ள பானங்கள் அவசியம். சுத்தமான தண்ணீர் – தினமும் 8-10 கிளாஸ் குடிக்க வேண்டும். எலுமிச்சை நீர் – குடல் இயக்கத்தை தூண்டும். பழச்சாறு (Fresh Juice) – ஆப்பிள், மாதுளை சாறு சிறந்தது .தயிர் – ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
மலச்சிக்கலை தவிர்க்க வழிமுறைகள் :
* அதிகமாக மாவு, ஜங்க் உணவு, இறைச்சி உணவுகளை தவிர்க்கவும்.
* குறைந்தது 30 நிமிடங்கள் தினமும் நடைப்பயிற்சி செய்யவும்.
* உணவை மெதுவாக நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
* தினமும் அதிக நார்சத்து உணவுகளை உணவில் சேர்க்க வேண்டும்.
* கொத்தமல்லி, இஞ்சி, வெந்தயம், சீரகம் போன்ற மசாலா பொருட்கள் செரிமானத்திற்கு உதவுகின்றன.