மருதமலை கோயிலுக்கு திடீர் விசிட் அடித்த யோகிபாபு; சாமி தரிசனம் செய்த வீடியோ இதோ

3 days ago
ARTICLE AD BOX

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் படப்பிடிப்புக்காக கோயம்புத்தூர் சென்றிருந்த நிலையில், அங்குள்ள மருதமலை முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது கோவிலில் நடைபெற்ற மிகவும் விசேஷமான அர்த்தஜாம பூஜையில் கலந்துகொண்ட யோகிபாபுவுக்கு அர்ச்சகர்கள் சிறப்பு பிரசாதங்களையும் வழங்கினர். அதன் வீடியோ வைரலாகிறது.

யோகிபாபு தற்போது ஜி.டி நாயுடு வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் கோவையில் தான் நடைபெறுகிறது. நடிகர் மாதவன் கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக கோவை வந்த யோகிபாபு, மருதமலை முருகனை தரிசித்துள்ளார். அப்போது தான் கொண்டு வந்த புதிய படத்தின் ஸ்கிரிப்ட் புத்தகத்தையும் சாமி பாதத்தில் வைத்து வணங்கினார்.

Read Entire Article