மருதநாயகம் மட்டுமின்றி கமல் ஹாசனால் கைவிடப்பட்ட டாப் 4 மூவிஸ் பற்றி தெரியுமா?
2 hours ago
ARTICLE AD BOX
சினிமா என்று எடுத்துக் கொண்டாலே ஒரு படம் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு, படம் எடுத்து முடிக்கப்பட்டு வெற்றிகரமாக திரைக்கு வந்தாலே அந்த படம் வெற்றிப் படம் தான். ஏனென்றால் அறிவிப்பு வெளியான பிறகு ஸ்டாப் ஆன படங்களும், நடித்துக் கொண்டிருந்த பிறகு கைவிடப்பட்ட படங்களும் ஏராளம். அதுமட்டுமின்றி நடித்து முடித்த பிறகு கிடப்பில் போடப்பட்ட படங்களும் உண்டு. அந்த வகையில் நடிகர் கமல் ஹாசன் நடிக்க கமிட்டாகி ஷூட் தொடங்கிய பிறகு கைவிடப்பட்ட சில படங்களும் உண்டு.
அதில் ஒன்றுதான் மருதநாயகம். இந்த படம் போன்று கிடப்பில் போட்டப்பட்ட படங்களின் பட்டியலில் இடம் பெற்றிருப்பது மர்மயோகி. தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் இந்தப் படம் உருவாக இருந்தது. மோகன் லால், ஹேமா மாலினி, வெங்கடேஷ் ஆகியோர் உள்பட ஏராளமானோர் நடிக்க இருந்தனர். கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனமும், பிரமீட் சைமீரா நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்க இருந்தது. ஆனால் குசேலன் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தால் பிரமீட் சைரா நிறுவனம் இந்தப் படத்திலிருந்து பின் வாங்கியது.
கமல் ஹாசனும் இந்தப் படத்தை கிடப்பில் போட்டுவிட்டு உன்னைப் போல் ஒருவன் படத்தில் பிஸியானார்.
இந்தப் படத்தை தொடர்ந்து கிடப்பில் போடப்பட்ட மற்றொரு படம் யாவரும் கேளிர். இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் இந்தப் படம் உருவாக இருந்தது. முழுக்க முழுக்க காமெடி கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருந்தார். ஆனால், இந்தப் படம் கைவிடப்பட்ட நிலையில் தான் கேஎஸ்  ரவிக்குமார், உதயநிதி ஸ்டாலின், த்ரிஷா, கமல் ஹாசன் என்று இதே காம்பினேஷனில் மன்மதன் அம்பு படம் திரைக்கு வந்தது.
ஆனால், டிகே ராஜ்குமார் உடல்நலக் குறைவு காரணமாக இந்த படத்திலிருந்து விலகிய நிலையில் கமல் ஹாசன் இந்தப் படத்தை இயக்க இருந்தார். ஆனால், இந்தப் படம் அப்படியே தள்ளிக் கொண்டே போன நிலையில் இந்தப் படம் கைவிடப்பட்டது. சிவாஜி கணேசன் மற்றும் கமல் ஹாசன் நடிப்பில் திரைக்கு வந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் தான் தேவர் மகன். இந்தப் படம் மட்டுமின்றி பாடல்களும் ஹிட். கடந்த 2018 ஆம் ஆண்டு தேவர் மகன் 2 உருவாக வாய்ப்புகள் இருந்தால் கண்டிப்பாக உருவாகும் என்று கூறியிருந்தார். ஆனால், இந்தப் படத்தில், விஜய் சேதுபதி தேவர் மகன் படத்தில் நடித்த நாசரின் மகனான மாயன் என்ற ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. எனினும், இந்தப் படம் அடுத்தடுத்து பல பிரச்சனைகளை சந்தித்த நிலையில் கைவிடப்பட்டது.
Read Entire Article