ARTICLE AD BOX
ஆளை பார்த்தா செம ஜாலியா இருக்க... பழகிப் பார்த்தா பயங்கரமான டிப்ரசன்ல இருக்கியேடா!
சென்னை : இன்னும் திருமணம் ஆகவில்லையே என கவலையில் இருக்கும் 90ஸ் கிட்ஸ்களின் வெந்தப் புண்ணில் வேலை பாய்ச்சுவது போல், நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
ஊரெல்லாம் காதல், திருமணம் என கொண்டாடித் தீர்க்கும் போதெல்லாம், மறக்காமல் மீம்ஸ்களின் அதிகம் அடிபடுவது 90ஸ் கிட்ஸ்கள்தான். ஏற்கனவே வயதுக்கேத்த வேலை கிடைக்கவில்லை, திருமணம் ஆகவில்லை என கவலையில் இருக்கும் அவர்களை மேலும் கடுப்பேற்றுவது போல் மீம்ஸ்களைப் பகிர்வதுதான் நம் மீமர்களுக்குப் பிடித்தமானப் பொழுதுபோக்கு.

இப்போதும் அப்படித்தான், "வயசாச்சே.. இன்னும் கல்யாணம் ஆகலையேனு கவலைபடாதீங்க.. பிரெஷ்ஷான ப்ரூட்ஸைவிட ட்ரை ப்ரூட்ஸ்க்குதான் வேல்யூ அதிகம்!" என ஆறுதல் கூறுவதுபோல், கலாய்த்து வருகின்றனர். கூடவே, "ஆளை பார்த்தா செம ஜாலியா இருக்க... பழகிப் பார்த்தா பயங்கரமான டிப்ரசன்ல இருக்கியேடா!" என சைடுகேப்பில் கொஞ்சம் அவர்களுக்காக வருத்தமும் பட்டுள்ளனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான 90ஸ் கிட்ஸ்கள் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









