மனைவி தனஸ்ரீ வர்மாவை விவாகரத்து செய்தார் யுஸ்வேந்திர சாஹல்! இதுதான் காரணமா?

3 days ago
ARTICLE AD BOX

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மனைவி தனஸ்ரீ வர்மாவை விவாகரத்து செய்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

மனைவி தனஸ்ரீ வர்மாவை விவாகரத்து செய்தார் யுஸ்வேந்திர சாஹல்! இதுதான் காரணமா?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஸ்பின் பவுலர் யுஸ்வேந்திர சாஹல். இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் வெற்றியை தேடிக் கொடுத்துள்ள இவர் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இவரது மனைவி பிரபல நடனக் கலைஞர் தனஸ்ரீ வர்மா. இருவரும் கடந்த 2020ம் ஆண்டு திருமனம் செய்து கொண்டனர். யுஸ்வேந்திர சாஹல்-தனஸ்ரீ வர்மா உறவில் விரிசல் ஏற்படுள்ளதாகவும், இருவரும் விவாகரத்து பெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. 

இன்ஸ்டாகிராமில் இருவரும் ஒருவரையொருவர் அன்பாலோ செய்ததால் இருவரும் பிரிய உள்ளதாக கருத்துகள் பரவி வந்தன. சமூகவலைத்தளத்தில் தனஸ்ரீ சாஹல் என்ற பெயரை  தனஸ்ரீ வர்மா என மாற்றிக் கொண்டதால் இருவரும் பிரிய உள்ளதாக கருத்துகள் வலுத்தன. இந்த விவகாரம் தொடர்பாக தனஸ்ரீ வர்மா வெளிப்படையாக கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்த நிலையில், இது குறித்து யுஸ்வேந்திர சாஹல் மவுனம் கலைத்திருந்தார். 
 

தனஸ்ரீ வர்மா-யுஸ்வேந்திர சாஹல்

இது தொடர்பாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு இருந்த அவர், ''சமீபகாலமாக எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் குறித்து நான் புரிந்து வைத்துள்ளேன். எனது தனிப்பட்ட வாழ்க்கையில் சில விஷயங்கள் உண்மையாக இருக்கலாம்; பொய்யாக இருக்கலாம் என ஊடகங்கள் ஊகித்து வருவதை கவனித்து வருகிறேன். 

ஒரு மகனாக, ஒரு சகோதரனாக, ஒரு நண்பராக, இந்த ஊகங்களில் ஈடுபட வேண்டாம் என்று அனைவரையும் நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.ஏனெனில் அவை எனக்கும் என் குடும்பத்திற்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளன'' என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், யுஸ்வேந்திர சாஹலும், தனஸ்ரீ வர்மாவும் இப்போது அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது இவர்கள் இருவரும் விவாகரத்து கோரி மும்பையில் உள்ள பாந்த்ரா குடும்ப நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். 

விராட் கோலி, ரோகித் சர்மா உள்பட சாம்பியன்ஸ் டிராபி 2025யில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டாப் 7 வீரர்கள்!
 

தனஸ்ரீ வர்மா-யுஸ்வேந்திர சாஹல் விவாகரத்து

விவாகரத்து தொடர்பாக நேற்று இறுதி விசாரணை நடைபெற்ற நிலையில், 45 நிமிடங்கள் நடந்த ஆலோசனையில் யுஸ்வேந்திர சாஹலும், தனஸ்ரீ வர்மாவும் தாங்கள் இருவரும் கடந்த 18 மாதங்களாக தனித்தனியாக பிரிந்து வாழ்வதாகவும் ஒருமனதாக பிரிய உள்ளதாக நீதிபதியிடம் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து நீதிபதி அவர்கள் இருவருக்கும் விவாகரத்து வழங்கினார்.

இதுதொடர்பாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட யுஸ்வேந்திர சாஹல், “நான் நம்ப முடியாத அளவுக்குக் கடவுள் என்னைப் பாதுகாத்துள்ளார்'' என்று கூறியுள்ளார். ''கடவுள் உங்கள் நன்மைக்காக எல்லாவற்றையும் ஒன்றாகச் செய்ய முடியும்'' என்று தனஸ்ரீ வர்மா தெரிவித்துள்ளார். அண்மை காலமாக திரையுலகினர் மற்றும் விளையாட்டு பிரபலங்களிடையே விவாகரத்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

யுஸ்வேந்திர சாஹல் விவாரத்துக்கு என்ன காரணம்?

தனஸ்ரீ வர்மா நடனக் கலைஞரும், நடன அமைப்பாளரும் ஆவார். இவர் பிரபல பல் மருத்துவராகவும் உள்ளார். அவர் கணவர் யுஸ்வேந்திர சாஹலுடன் அதிக நேரம் செலவழிப்பதில்லை எனவும் நண்பர்களுடன் நீண்ட நேரம் செலவழிப்பதால் இருவருக்கும் இடையே உரசல் உண்டானது என தகவல்கள் பரவின. இதுவே இருவரும் விவாகரத்து செய்ய காரணம் என தகவல் வெளியாகி இருக்கிறது.

வங்கதேசத்தை காலி செய்த ஷமி, கில்! சாம்பியன்ஸ் டிராபியில் மாஸ் காட்டும் இந்தியா

Read Entire Article