ARTICLE AD BOX

வீட்டின் கூரையில் சோலார் பேனல்களை பொருத்திக் கொள்ளும் வீடுகளுக்கு மாதம் தோறும் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கும் பிரதமரின் ” பிரதம மந்திரி சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா” என்ற இலவச மின்சார திட்டத்தை பிரதமர் மோடி பிப்ரவரி 13ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 15,000 முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை ஒரே குடும்பத்தினரால் சேமிக்க முடியும். இந்த திட்டத்தின் கீழ் குடும்பத்தினருக்கு மத்திய அரசு மானியம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று கிலோ வாட் வரை ஒவ்வொரு கிலோ வாட்டுக்கும் 18 ஆயிரம் ரூபாய் மானியம் கிடைக்கும். மூன்று முதல் பத்து கிலோ வாட் வரை நிறுவினால் முதல் மூன்று கிலோ வாட்டுக்கு தலா 18,000 ரூபாயும், அதற்கு அடுத்த ஒவ்வொரு கிலோ வாட்டுக்கும் தலா 9000 மானியம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க முதலில் https://pmsuryaghar.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும். பதிவு செய்வதற்காக தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்யவும்.
Customer நம்பர் மற்றும் செல்போன் நம்பர் லாகின் செய்யவும். வீட்டின் கூரையில் சோலார் பேனல் பொருத்துவதற்கான ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்பவும். பின்னர் DISCOM ஒப்புதலுக்காக அங்கீகாரம் கிடைத்ததும், சம்பந்தப்பட்ட மின் விநியோக நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர்கள் வந்து யூனிட்டை நிறுவுவார்கள். பின்னர் நெட் மீட்டருக்கு விண்ணப்பிக்கவும்.நெட் மீட்டர் பொருத்திய பின், மின்பகிர்மான நிறுவனம் (DISCOM) வந்து, வீட்டை சோதனை செய்வார்கள். அதன் பிறகு அதிகாரிகள் போர்ட்டலில் இருந்து அனுமதி கடிதத்தை கொடுப்பார்கள். இதனையடுத்து போர்ட்டல் மூலம் வங்கி விவரங்களையும், கேன்சல் ஆன செக் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். 30 நாட்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கில் மானியம் கிடைக்கும்.