ARTICLE AD BOX
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் ஜெய் குமார் பட்டேல் என்ற நபர் ஒருவர் வசித்து வருகிறார். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும், ரிங்கு என்ற பெண் ஒருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஆனால் ஒரு சில காரணங்களால் இவர்களின் திருமணம் பாதியிலேயே நின்றது. இதனால் ரிங்கு, வேறு ஒரு நபரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஆனால், அவர் தொடர்ந்து ரிங்கு ஜெய் குமார் பட்டேலுடன் தொடர்பில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில், ஜெய் குமார் பட்டேல் ரிங்குவின் செல்போன் அழைப்புகளுக்கும் மெசேஜ்களுக்கும் பதிலளிப்பதை நிறுத்திவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ரிங்கு, ஜெய் குமார் பட்டேலை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி, அவர் ஜெய் குமாரை பின் தொடர ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று ஜெய் குமார் பட்டேல் நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவரை காரில் பின் தொடர்ந்து சென்ற ரிங்கு, ஜெய் குமார் பைக் மீது தனது காரை வைத்து மோதியுள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஜெய் குமாரை, ரிங்கு கத்தியால் குத்திவிட்டு, அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றுள்ளார்.
இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெய் குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு ரிங்குவை கைது செய்துள்ளனர்.
The post ஆண்களே உஷாரா இருங்க!!! செல்போன் அழைப்பை எடுக்காததால், பெண் செய்த கொடூர செயல்.. appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.