ரத்தக்களரியான ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்.. டாப் பண்டுகளுக்கே இந்த நிலையா..?

3 hours ago
ARTICLE AD BOX

ரத்தக்களரியான ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்.. டாப் பண்டுகளுக்கே இந்த நிலையா..?

Market Update
Published: Tuesday, March 4, 2025, 19:15 [IST]

2025 ஆம் ஆண்டு, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தவர்களுக்கு சவாலான ஆண்டாக அமைந்துள்ளது என்றால் மிகையில்லை. பல ஃபண்டுகள் கணிசமான இழப்பை இந்தாண்டு துவங்கி 2 மாதத்தில் சந்தித்துள்ளன.

நடப்பு காலண்டர் ஆண்டில் இதுவரை, பல்வேறு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் 27% வரை இழப்பை சந்தித்துள்ளன. தற்போது செயல்பாட்டில் இருக்கும் 280 ஃபண்டுகள் எதிர்மறை வருமானத்தை அதாவது சரிவை பதிவு செய்துள்ளன.

 ரத்தக்களரியான ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்.. டாப் பண்டுகளுக்கே இந்த நிலையா..?

சாம்கோ ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் அதிகபட்ச இழப்பு: 2025 ஆம் ஆண்டு காலகட்டத்தில், சாம்கோ ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது. இந்த பண்டு சுமார் 27.30% குறைந்துள்ளது. இதேபோல் மோதிலால் ஓஸ்வால் ELSS டேக்ஸ் சேவர் ஃபண்ட் மற்றும் சாம்கோ ELSS டேக்ஸ் சேவர் ஃபண்ட் ஆகியவை 25.98% மற்றும் 25.74% வரையிலான சரிவை எதிர்கொண்டு உள்ளது என எக்னாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

ஸ்மால்-கேப் ஃபண்டுகளும் பாதிப்பு: ஸ்மால்-கேப் ஃபண்டுகளும் குறிப்பிடத்தக்க சரிவை சந்தித்துள்ளன. LIC MF ஸ்மால் கேப் ஃபண்ட் மற்றும் HSBC ஸ்மால் கேப் ஃபண்ட் ஆகியவை 25.67% மற்றும் 24.48% வரையிலான சரிவை பதிவு செய்துள்ளது.

சந்தை ஏற்ற இறக்கம்: பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கமே இந்த இழப்புகளுக்கு முக்கிய காரணம். உலகளாவிய பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் மற்றும் வட்டி விகித உயர்வு போன்றவை பங்குச் சந்தையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் மதிப்பு குறைந்துள்ளது.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்: ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள், சந்தை ஏற்ற இறக்கங்களைப் புரிந்துகொண்டு நீண்ட கால முதலீட்டு இலக்குகளை நிர்ணயிப்பது முக்கியம். சந்தை சரிவின் போது பீதியடைந்து முதலீடுகளை திரும்பப் பெறுவது, நீண்ட கால வருமானத்தை பாதிக்கலாம். முதலீடு செய்வதற்கு முன், நிதி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

இதேபோல் இந்தியாவில் கடந்த 2 மாத காலக்கட்டத்தில் அதிகப்படியான மக்கள் தங்களுடைய எஸ்ஐபி முதலீட்டை நிறுத்தியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. எஸ்ஐபி முதலீட்டை பாதியில் நிறுத்துவது தவறு என நிபுணர்கள் கூறுவேளையில், BUY on DIP அடிப்படையில் சரிவிலும் முதலீடு செய்தால் நீண்ட கால அடிப்படையில் லாபத்தை பார்க்க முடியும்.

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் அதிக ரிஸ்க் கொண்ட முதலீடுகள். சந்தை ஏற்ற இறக்கங்களால் உங்கள் முதலீட்டின் மதிப்பு குறையலாம். எனவே, முதலீடு செய்வதற்கு முன், ரிஸ்க்குகளைப் புரிந்துகொள்வது முக்கியம்.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed
English summary

Equity Mutual Funds Suffer Up to 27% Losses in 2025- Check which fund lost more YTD

Equity mutual funds have experienced substantial losses in 2025, with some down as much as 27%. The Samco Flexi Cap Fund leads the decline, followed by Motilal Oswal and Samco ELSS Tax Saver Funds. Small-cap funds like LIC MF and HSBC have also been hit hard, highlighting the challenging market conditions for investors.
Other articles published on Mar 4, 2025
-->
Read Entire Article
LEFT SIDEBAR AD

Hidden in mobile, Best for skyscrapers.