மடியில் சிந்திய சூடான டீ.. டெலிவரி டிரைவருக்கு ரூ.433 கோடி இழப்பீடு! ஸ்டார்பக்ஸிற்கு உத்தரவு

9 hours ago
ARTICLE AD BOX

மடியில் சிந்திய சூடான டீ.. டெலிவரி டிரைவருக்கு ரூ.433 கோடி இழப்பீடு! ஸ்டார்பக்ஸிற்கு உத்தரவு

New York
oi-Nantha Kumar R
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: மடியில் சிந்திய ஒரு சொட்டு சூடான டீயால் ரூ.433 கோடியை டெலிவரி டிரைவருக்கு வழங்க உலகளவில் பிரபலமான ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் மைக்கேல் கார்சியா. இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ‛போஸ்ட்மேட்ஸ்' எனும் டெலிவரி நிறுவனத்தில் டிரைவாக பணியாற்றினார். இவர் அந்த பகுதியில் உள்ள பிரபலமான ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துக்கு சென்றார்.

அந்த கடை drive-thru வகையை சேர்ந்தது. இதனால் மைக்கேல் கார்சியா காரில் இருந்தபடியே 3 வெண்டி மெடிசின் பால் டீ வாங்கினார். ஊழியர் அவரிடம் அட்டை பெட்டியில் வைத்து அந்த டீயை வழங்கினார்.

us-delivery-driver-burnt-by-hot-tea-at-starbucks-awarded-rs-433-cr-in-damages

அப்போது எதிர்பாராத விதமாக அட்டை பெட்டிக்குள் இருந்த ஒரு டீ அவரது மடியில் விழுந்து கொட்டியது. அந்த டீ மிகவும் சூடாக இருந்தது. இதனால் அவரது ஆணுறுப்பில் பாதிப்பு ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை என்பது அளிக்கப்பட்டது.

இருப்பினும் சூடான டீ கொட்டியதால் அவரது ஆணுறுப்பு என்பது பாதிப்பு அடைந்தது. இந்த சம்பவம் என்பது கடந்த 2020 பிப்ரவரி மாதம் 8 ம் தேதி நடந்தது. மேலும் ஸ்டார்பக்ஸின் ஊழியர் சூடான டீயை கையாள்வதில் தவறு செய்ததாகவும், அதனால் தான் தனது மடியில் டீ கொட்டி ஆணுறுப்பு பாதிக்கப்பட்டதாகவும் மைக்கேல் கார்சியா கூறினார். இதுதொடர்பாக அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

நீதிமன்றத்தில் வழக்கு நட்நது வுந்தது. அப்போது மைக்கேல் கார்சியா தரப்பிலான வழக்கறிஞர்கள், மருத்துவமனையில் பெற்ற சிகிச்சைகள், மற்றும் தோல் அறுவை சிகிச்சை, தீக்காயத்தால் ஏற்பட்ட சிதைவு உள்ளிட்டவற்றின் வலி, வேதனைகளை எடுத்துரைத்தனர். அதுமட்டுமின்றி அந்த சிகிச்சைக்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மைக்கேல் கார்சியாவுக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக வழங்க ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டள்ளது. 50 மில்லியன் அமெரிக்க டாலர் என்பது நம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.433 கோடியாகும். இதனால் மைக்கேல் கார்சியா தரப்பு ஹேப்பியாகி உள்ளது. அதேவேளையில் இந்த தீர்ப்பு ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து உள்ளது. மேலும் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஸ்டார்பக்ஸ் சார்பில், ‛‛மைக்கேல் கார்சியா மீது நாங்கள் அனுதாபம் கொள்கிறோம். ஆனால் இந்த சம்பவத்துக்கு நாங்கள் தான் காரணம் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் ஏற்கவில்லை. அதோடு இழப்பீடு தொகை என்பது மிக அதிகமாக உள்ளதாக கருதுகிறோம். இதுதொடர்பாக மேல்முறையீடு செய்ய உள்ளோம்'' என்று கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
English summary
US Delivery driver Michael Garcia was awarded $50 million (approximately Rs 433 crore) in damages after a jury found that a Starbucks location was negligent in handling scalding hot tea. Michael Carcia will gets relief from nearly 5 years after the incident occurred on February 8, 2020.
Read Entire Article