ARTICLE AD BOX

முகலாய மன்னர் அவுரங்கசீப்பை புகழ்பவர்கள் துரோகிகள் என்று மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வர் ஏகநாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் அவுரங்கசீப் கல்லறையை இடிக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தினர். அனைவரும் அதையே விரும்புவதால் அதை சட்டப்படி செய்வோம் என்று அம்மாநில முதல்வர் தேவேந்திர பாட்னாவிஸ் தெரிவித்தார். இந்நிலையில் தானே மாவட்டத்தில் உள்ள பகுதியில் சிவாஜி மகாராஜின் சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்கு நேற்று பங்கேற்று இருந்தார்.
அப்போது பேசிய அவர் அவுரங்கசீப் மகாராஷ்டிராவை கைப்பற்ற வந்தார். ஆனால் அவர் சிவாஜி மகாராஜின் தெய்வீக சக்தியை எதிர்கொண்டார். இன்னும் அவரை போற்றுபவர்கள் துரோகிகளே என்று அவர் தெரிவித்தார். சிவாஜி மகாராஜ் ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர், சகாப்தத்தின் மனிதர், நீதியை ஊக்குவிப்பவர் மற்றும் சாமானிய மக்களின் மன்னர். மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற வரலாற்றை தொடர்ந்து நினைவூட்டும் விதமாக இந்த சிலை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை மையமாகக் கொண்டு நேற்று நாக்பூரில் கலவரம் வெடித்தது குறிப்பிடத்தக்கது.