ARTICLE AD BOX
வேலூர்,
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளை சந்தித்த பா.ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மக்களை ஏமாற்றும் நீளமான பட்ஜெட். ஒன்றும் இல்லாத வெற்று பட்ஜெட்டாக அமைந்துள்ளது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் மணல் மற்றும் ஆயிரம் கோடி மதுபான ஊழல் எதிரொலிக்கும். தமிழக மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் பெண்களின் பாதுகாப்புக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. பெண்கள் முன்னேற்றத்திற்கான எந்த திட்டமும் இல்லை.
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையவில்லை என பொருளாதார ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. அதற்காக இந்த பட்ஜெட்டில் எந்த ஒரு புதிய திட்டங்களும் கொண்டு வரவில்லை. கியாஸ் மானியம் 100 ரூபாய் அறிவிப்பதாக சொன்னார்கள் ஆனால் அறிவிக்கவில்லை. ஓய்வூதிய திட்டங்கள் மற்றும் எந்த மின் திட்டங்கள் ஏதும் இடம் பெறவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.