மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறார் முதல்வர்: அண்ணாமலை

2 hours ago
ARTICLE AD BOX

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,

யாருமே தொகுதி மறுவரையறை பற்றி பேசாத நிலையில் முதல்வர் ஏன் கபட நாடகமாடுகிறார்.

நாடாளுமன்ற தொகுதிகள் குறையும் என யார் சொன்னார்கள் என்பதை முதல்வர் தெரிவிக்க வேண்டும்.

தொகுதி மறுவரையறையில் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கொண்டுவருவது எங்கள் கடமை.

முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்களிடம் பயத்தை ஏற்படுத்துகிறார். மக்கள் மனதில் பயத்தை ஏற்படுத்த முயலும் முதல்வரை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் எங்கள் எதிரி என திமுக கூறுகிறது. குருட்டு பூனை விட்டத்தில் பாய்வதைப் போன்று முதல்வர் பேசுகிறார். தொகுதி மறுவரையில் தமிழகத்துக்கு பாதிப்பு என யார் சொன்னது என்பதை முதல்வர் விளக்க வேண்டும். அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்று இது குறித்து கேள்வி எழுப்பும்.

பெயிண்ட் எடுத்துச் செல்லும் திமுகவினர் இந்திக்கு பதிலாக ஆங்கிலத்தை அழிக்க முயற்சிக்கின்றனர்.

மூன்று மொழிகள் படித்த சாதனையாளர்கள் யாரும் முதல்வர் கண்ணுக்குத் தெரியவில்லையா? திமுக குடும்பத்தில் உள்ள குழந்தைகள் மூன்று மொழிகள் படிப்பதும், தமிழ்நாட்டு மக்கள் இரு மொழி படிக்க வேண்டும் என்பதே திமுகவின் மொழிப் போராட்டம்.

பள்ளிக் கூடத்தில் மூன்றாவது மொழி என்ன என்பதை ஆசிரியர் பெற்றோர் கழகம் முடிவு செய்யும். ஒரு மாநில முதல்வர் முடிவு செய்ய முடியாது. மூன்றாவது மொழியாக கன்னடம் இருக்கலாம். மலையாளம் இருக்கலாம். அது அந்தந்தப் பகுதிகளைப் பொறுத்தது. ஹிந்திதான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

இருமொழிக் கொள்கையால்தான் மாநிலம் முன்னேறியது என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டார்.

Read Entire Article